[X] Close

கர்ப்பிணியின் உயிரைக் காப்பாற்ற ரம்ஜான் நோன்பை துறந்து ரத்த தானம் செய்த சகோதரர்கள்


  • kamadenu
  • Posted: 13 May, 2019 08:41 am
  • அ+ அ-

கர்ப்பிணியின் உயிரைக் காப்பாற்ற கரூரைச் சேர்ந்த முஸ்லிம் சகோதரர்கள் தங்களது ரம்ஜான் நோன்பை துறந்து ரத்த தானம் செய்தனர்.

கரூர் மாவட்டம் தோட்டக்குறிச்சி பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர்கள் சலீம் (46), சாதிக்அலி (42). சகோதரர்களான இருவரும் சொந்தமாக தொழில் செய்து வருவதுடன், தொடர்ந்து ரத்ததானம் செய்து வருகின்றனர். இவர்கள் ரம்ஜான் நோன்பிருந்து வருகின்றனர்.

இந்நிலையில், திருப்பூர் மாவட் டம் தாராபுரத்தில் லோகநாயகி என்ற கர்ப்பிணிக்கு அறுவை சிகிச்சைக்கு ‘பி பாசிட்டிவ்’ வகை ரத்தம் தேவை என திருப்பூர் மாவட்டம் வெள்ளக் கோவில் நண்பர்கள் ரத்த தானக் குழுவை சேர்ந்த பாலு என்பவர் சலீம், சாதிக் அலி சகோதரர்களிடம் கடந்த 10-ம் தேதி இரவு கூறியுள்ளார். அப்போது, ‘பி பாசிட்டிவ்’ வகை ரத்த கொடையாளர்கள் யாரும் கிடைக்காததால், தாங்களே ரத்ததானம் செய்ய முன்வந்தனர். ஆனால், அவர்கள் நோன்பிருப் பதால் நண்பர் பாலு தயங்கியுள் ளார். இருந்தாலும், சகோதரர்கள் இருவரும் நேற்று முன்தினம் காலை நோன்பை கைவிட்டு சாப்பிட்டுவிட்டு தாராபுரம் சென்று அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் ரத்தம் வழங்கினர். இதனால் லோகநாயகியின் குடும்பத்தார், வெள்ளக்கோவில் நண்பர்கள் ரத்ததானக்குழுவினர் உள்ளிட்டோர் நெகிழ்ச்சியடைந் தனர்.

இதுகுறித்து சாதிக் அலி கூறும்போது, ‘‘நோன்பை விட ஒரு உயிரை காப்பதுதான் முக்கியம் என முடிவு செய்து, ‘பி பாசிட்டிவ்’ ரத்த வகை உள்ள நானும், என் அண்ணணும் நோன்பை கைவிட்டு சாப்பிட்ட பின் ரத்ததானம் வழங்கினோம். இது இறைவன் நமக்கு அளித்த வாய்ப்பு. இன்று (நேற்று) முதல் இருவரும் மீண்டும் நோன்பை தொடங்கியுள்ளோம்’’ என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close