[X] Close

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமையும்போது தமிழகத்தின் உரிமைகள் மீட்கப்படும்: அரவக்குறிச்சி தொகுதியில் வைகோ பிரச்சாரம்


  • kamadenu
  • Posted: 13 May, 2019 08:40 am
  • அ+ அ-

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமையும்போது தமிழகத்தின் பறிக்கப்பட்ட உரிமைகள் மீட்கப்படும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி வெஞ்சமாங்கூடலூரில் திமுக வேட்பாளர் வி.செந்தில்பாலாஜியை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று பேசியது: இந்த தொகுதியில், குடிநீர் இல்லாத கிராமங்களில் குடிநீர் வழங்கப்படும். தடுப்பணை கட்டப்படும் என திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி வாக்குறுதி அளித்துள்ளார். சட்டப்பேரவைக்கு செல்வது செந்தில்பாலாஜிதான் என்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நாசமாகிவிட்டது. குழந்தைகள் பணத்துக்காக விற்கப்ப டுகின்றனர். கேபிள் டிவிக்கு ரூ.250 கட்டணம். காஸ் சிலிண்டர் விலை ரூ.ஆயிரத்தை நெருங்கிவிட்டது. ஆட்சி மாறியவுடன் பழைய விலைக்கு அனைத்தும் கிடைக்கும்.

மத்தியில் மோடி ஆட்சி தூக்கி எறியப்படும். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமையும் போது தமிழகத்தின் பறிக்கப்பட்ட அனைத்து உரிமைகளும் மீட்கப்படும். இடைத்தேர்தல் நடைபெறும் 22 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close