[X] Close

விஷால் பற்றி சொல்லிச் சொல்லி அலுப்பாகி விட்டது, அவர் இன்னும் அப்ளிகேஷனை பூர்த்தி செய்யவே கத்துக்கல: எஸ்.வி.சேகர்


  • kamadenu
  • Posted: 12 May, 2019 14:49 pm
  • அ+ அ-

நடிகர் சங்கத்துக்கு நடிகை ராதிகா அல்லது டி.ராஜேந்தர் தலைமையில் சிறந்த குழு பொறுப்பேற்கும் என எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

 

திருச்சியில் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

 

ராதாரவி, சரத்குமார் மீது என்ன குற்றச்சாட்டுகளை சொன்னோமோ அதைவிட பெரிய லெவல்... ராதாரவியும் சரத்குமாரும் ஏதோ ஒரு கிரவுண்ட் நிலத்தை எடுத்தாட்டங்க ஆக்ரமிச்சுட்டாங்க வித்துட்டாங்கன்னு ஏதோ கேஸ் போட்டுருக்காங்க.. அப்ப 5 கிரவுண்ட் நிலத்தை 40 கோடி ரூபாய்க்கு இவர்கள் ஆக்ரமிச்சிருக்காங்க என்ற குற்றச்சாட்டுக்கு பதிலே சொல்ல மாட்டேன் என்கிறார்கள்.

 

எனவே மீண்டும் ஒரு நல்ல குழு அமையலாம். அது ராதிகா தலைமையில் இருக்கலாம் அல்லது டி.ராஜேந்தர் தலைமையில் இருக்கலாம், எஸ்.வி.சேகர் தலைமையாக இருந்தா இருக்கலாம்.

 

அடிக்கடி விஷாலைப் பத்தி சொல்லிச் சொல்லி எனக்கு அலுத்துப் போச்சு அவர் இன்னும் அப்ளிகேஷனே ஃபில் அப் பண்ணக் கத்துக்கல... ஆர்.கே.நகரப் பாத்தாலே தெரியும்.

 

இவ்வாறு கூறினார் எஸ்.வி.சேகர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close