[X] Close

ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து மே 23-ம் தேதிக்கு பிறகு அறிவிக்கிறார்: சகோதரர் சத்ய நாராயண ராவ் தகவல் 


23

  • kamadenu
  • Posted: 11 May, 2019 17:50 pm
  • அ+ அ-

-அ.வேலுச்சாமி

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து மே 23-ம் தேதிக்கு பிறகு நல்ல முடிவு வரும் என ரஜினியின் மூத்த சகோதரர் சத்ய நாராயண ராவ் தெரிவித்துள்ளார்.

திருச்சி கே.கே.நகர் அருகே ஓலையூர் பகுதியிலுள்ள குமாரமங்கலம் கிராமத்தில் ரஜினியின் தாய் சௌ.ராம்பாய் - தந்தை ரானோஜிராவ் ஆகியோருக்கு ஸ்டாலின் புஷ்பராஜ் என்ற ரசிகரால் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. ரஜினி தாய், தந்தையரின் மார்பளவு வெண்கல சிலைகள், சுமார் இரண்டரை அடி உயரமுள்ள சிவலிங்கம் ஆகியவற்றுடன் கூடிய இந்த மணிமண்டபம் கடந்த மார்ச் 25–ம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இதன் 48-வது நாள் மண்டல பூஜை இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இதில் பங்கேற்ற ரஜினியின் மூத்த சகோதரர் சத்ய நாராயண கெய்க்வாட் அளித்த பேட்டி:

மக்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும் என இங்கு வழிபாடு நடத்தப்பட்டுள்ளது. இதில்  சாதுக்கள், சன்னியாசிகள், பக்தர்கள், ரசிகர்கள் என பல தரப்பினர் பங்கேற்றுள்ளனர். ரஜினிகாந்த் தற்போது படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். படப்பிடிப்பு நிறைவு பெற்ற பிறகு நிச்சயம் இங்கு வருவார்.

தனது அரசியல் பிரவேசம் பற்றி மே 23-ம் தேதிக்கு பிறகு அறிவிப்பதாக ரஜினிகாந்த் கூறியுள்ளார். அப்போது நிச்சயம் நல்ல முடிவு வரும்.  சிறப்பான திட்டங்கள் அவரிடம் உண்டு. ஒருவகையில் அவர் அரசியலுக்கு வராமல் தாமதமாவதும் நல்லதுக்குத்தான். நல்லதே நடக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close