[X] Close

ஒரே வழியில் 2 ரயில் இயக்கியதற்கு மொழிப் பிரச்சினை காரணம்?- ரயில்வே அதிகாரிகள் விசாரணை 


2

  • kamadenu
  • Posted: 11 May, 2019 09:06 am
  • அ+ அ-

-Mohamed Salman

திருமங்கலம் அருகே ஒரே வழித்தடத்தில் எதிர் எதிரே இரு ரயில்கள் இயக்கப்பட்டதற்கு மொழிப் பிரச்சினை காரணமா என அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

திருமங்கலம், கள்ளிக்குடி ரயில் நிலையங்களுக்கு இடையே நேற்று முன்தினம் மாலை சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதனால் செங்கோட்டை- மதுரை பயணிகள் ரயில் கள்ளிக்குடியிலும், மது ரை- செங்கோட்டை ரயில் திருமங்கலம் ரயில் நிலையத் திலும் நிறுத்தப்பட்டன. இதனால், பயணிகள் கடும் சிரமத்துக் குள்ளாகினர். சுமார் 2 மணி நேரத்துக்குப் பிறகு சிக்னல் சீரமைக்கப்பட்டது

இதையடுத்து கள்ளிக்குடியில் நிறுத்தி வைத்திருந்த ரயில் உரிய தண்டவாளத்தில் அனும திக்கப்பட்டு, மெதுவாக வந்து கொண்டிருந்தது. அந்த ரயில் திருமங்கலம் வருவதற்கு முன்பே, அங்கு ஏற்கெனவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மதுரை-செங்கோட்டை ரயில் அதே வழித்தடத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டது.

இப்பிரச்சினைக்குக் காரணம், கள்ளிக்குடி ரயில் நிலைய மேலாளர் பீம்சிங் மீனா. வடமாநிலத்தவரான அவர் அளித்த தகவல்கள் பிற அதிகாரிகளுக்குப் புரியாமல் இருந்திருக்கலாம் எனக் கூறப் படுகிறது. ஒருவருக்கொருவர் சரியான புரிதல் இன்றி ஒரே வழித்தடத்தில் 2 ரயில்களை இயக்க நேரிட்டது என்றும், கள்ளிக்குடியில் இருந்து ரயில் மெதுவாகச் சென்றதால், திருமங்கலத்தில் இருந்து கிளம்பிய ரயிலைச் சுதாரித்து நிறுத்த முடிந்தது. இதன் மூலம் பெரிய விபத்து தடுக்கப் பட்டுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்தனர். இது குறித்து தட்சிண ரயில்வே தொழிற்சங்க (டிஆர்இயூ) கோட்டச் செயலர் சங்கர நாராயணன் கூறியதாவது:

ரயில்வே பணிக்கான ஆட்க ளைத் தேர்வு செய்யும் ஆர்.ஆர்.பி.-க்குப் பதிலாக தனியார் முகமை (அவுட்சோர் சிங்) மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். தனியாருக்கு வழங்கியதன் விளைவு தெற்கு ரயில்வேயில் 25 சதவீதத்தினருக்கு மேல் வட மாநிலத்தவரே பணிபுரிகின்றனர். இந்தி மட்டுமே பேசும் அவர்களின் ஆங்கிலமும் புரிவதில்லை.

கள்ளிக்குடி நிலைய மேலாள ருக்கு ஏற்பட்ட மொழிச் சிக்கலே இப்பிரச்சினைக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இது பயணிகள் உயிருடன் விளையாடும் செயல். தமிழகம் உட்பட அந்தந்த மொழி பேசும் மாநிலங்களில் 90 சதவீத வேலைகளை அந்தந்த மாநிலத்தவருக்கே வழங்க வேண்டும். தனியார் முகமை மூலம் ஆட்களைத் தேர்வு செய்வதை ரயில்வே துறை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close