[X] Close

அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால் ராமநாதபுரத்தில் தாயும், சேயும் மரணம்: மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை


  • kamadenu
  • Posted: 11 May, 2019 09:02 am
  • அ+ அ-

ராமநாதபுரம் அரசு மருத்துவமனை மருத்துவர்களின் அலட்சியத்தால் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட நிறைமாதக் கர்ப்பிணியும், சேயும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தில், உறவினர்கள் மருத்து வமனையை முற்றுகையிட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம், மண் டபம் அருகே பிள்ளைமடம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவர் ராமநாதபுரம் வனத்துறை அலுவலகத்தில் வேட்டைத் தடுப்பு காவலராகப் பணிபுரிகிறார். இவரது மனைவி லட்சுமி (31). இவர்களுக்கு 8 வயதில் மகன் உள்ளார். இந்நிலையில் இரண் டாவது முறையாகக் கர்ப்பம டைந்த லட்சுமி, மண்டபம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்தார்.

நிறை மாத கர்ப்பிணியான லட்சுமிக்கு மே 7-ம் தேதி குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், பிரசவ நாளை விட 2 நாட்கள் அதிகமானதால் நேற்று முன்தினம் இரவு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அவர் அவசர அவசரமாக அனுமதிக்கப் பட்டார். அப்போது மருத்துவர்கள் உடனடியாக முறையான பரி சோதனை செய்து சிகிச்சையைத் தொடங்கவில்லை எனக் கூறப் படுகிறது.அவருக்கு சுகப் பிரசவம் நடைபெறும் என மருத்துவர்கள் காத்திருந்த நிலையில், நேற்று காலை சிசுவின் தலை மட்டும் வெளியே தெரிந்தது. இதனால் அச்சமடைந்த லட்சுமியின் உறவினர்கள் அறுவை சிகிச்சை செய்யுமாறு மருத்துவப் பணி யாளர்களை வற்புறுத்தினர். இந்நிலையில் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாக இருந்ததால் நேற்று காலை தாயும், சேயும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனால் ஆவேசமடைந்த லட்சுமியின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து மருத்துவ மனையை முற்றுகையிட்டனர்.

இதையடுத்து அவர்களிடம் மருத்துவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி உடல் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் (பொ) சகாய ஸ்டீபன் ராஜ் கூறியதாவது, கர்ப்பிணி லட்சுமிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. அதற்கடுத்து தொடர்ந்து 4 பிரசவங்களில் குழந்தை பிறந்ததும் இறந்துள்ளது. தற்போது அவருக்கு நடந்தது 6-வது பிரசவம். நேற்று முன்தினம் மாலை அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார். நேற்று காலையில் மருத்துவர்கள் அடங்கிய குழு அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்து குழந்தை எடுக்கப்பட்டது. ஆனால் பிறந்ததும் குழந்தை இறந்துவிட்டது. தொடர்ந்து லட்சுமிக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் 6 யூனிட் ரத்தம் ஏற்றப்பட்டது. இருந்தபோதும், ரத்தப்போக்கு நிற்கவில்லை. தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்தும் பகல் 12 மணியளவில் இறந்துவிட்டார். விரிவான விசாரணைக்குப் பிறகே மற்ற விவரங்களை தெரிவிக்க முடியும் என்றார்.

இதுகுறித்து ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் கூறுகையில், இச்சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

நோயாளிகளின் சிகிச்சையில் மெத்தனப்போக்கு காட்டும் மருத்துவர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close