[X] Close

4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல்; முதல்வர் பழனிசாமி 2-ம் கட்ட பிரச்சாரம்: திருப்பரங்குன்றத்தில் இன்று தொடங்குகிறார்


4-2

  • kamadenu
  • Posted: 11 May, 2019 07:34 am
  • அ+ அ-

-திருப்பரங்குன்றத்தில் இன்று தொடங்குகிறார்

அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர் தலில் முதல்வர் பழனிசாமி தனது 2-ம் கட்ட பிரச்சாரத்தை திருப்பரங்குன்றத்தில் இன்று தொடங்குகிறார்.

திருப்பரங்குன்றம், ஓட்டப் பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் 19-ம்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் பழனிசாமி ஏற்கெனவே தனது முதல்கட்ட பிரச்சாரத்தை நிறைவு செய்துள்ளார். இந்நிலையில், 2-ம் கட்ட பிரச்சாரத்தை இன்று தொடங்குகிறார்.

இது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருப்பரங்குன்றம், ஓட்டப் பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர்ஆகிய சட்டப்பேரவை தொகுதி களுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19-ம்தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான கே.பழனிசாமி, மே 11 (இன்று) முதல் 14-ம் தேதி வரை பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

அதன்படி, திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.முனியாண்டியை ஆதரித்து நாகமலை புதுக்கோட்டை, வடபழஞ்சி, தனக்கன்குளம், ஆர்.வி.பட்டி, நிலையூர் கைத்தறி நகர் பகுதிகளில் இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார். இன்றிரவு 8.45 மணிக்கு திருப்பரங்குன்றம் பேருந்து நிலையத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். நாளை (12-ம் தேதி) ஓட்டப்பிடாரம் தொகுதியில் வேட்பாளர் பெ.மோகனை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். மாலை 5 மணிக்கு வசவப்புரத்தில் தொடங்கி இரவு 9.15 மணிக்கு குறுக்குச்சாலை பகுதியில் பிரச்சாரத்தை முடிக்கிறார்.

13-ம் தேதி அரவக்குறிச்சி வேட்பாளர் வி.வி.செந்தில்நாதனை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, இனங்கனூர், ஆண்டிப்பட்டி கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் அவர் வாக்கு சேகரிக்கிறார். 14-ம் தேதி சூலூரில் வேட்பாளர் வி.பி.கந்தசாமியை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். அன்று மாலை 5 மணிக்கு சின்னியம்பாளையத்தில் பிரச்சாரத்தை தொடங்கி இரவு சூலூரில் முடிக்கிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close