[X] Close

சென்னையில் தண்ணீர் லாரிகள் மோதி 4 மாதங்களில் 17 பேர் உயிரிழப்பு: லாரிகளை மெதுவாக இயக்க போலீஸார் அறிவுரை


4-17

  • kamadenu
  • Posted: 11 May, 2019 07:27 am
  • அ+ அ-

சென்னையின் குடிநீர் தேவையைச் சமாளிக்க தினமும் 900 தண்ணீர் லாரிகள், சுமார் 7 ஆயிரம் முறை சென்று வருகின்றன. ஆனால் இந்த லாரிகள் சாலை விதிகளைக் கடைபிடித்து முறை யாக இயக்கப்படுவதில்லை.

இந்நிலையில், சென்னை பூந்தமல்லி சாலையில் வானகரம் பள்ளிக்குப்பம் அருகே கடந்த 4-ம் தேதி தாயின் கண்முன்னே தர் சன் என்கிற 5 வயது சிறுவன் தண் ணீர் லாரி மோதி பரிதாபமாக உயி ரிழந்தார். ஏப்ரல் 29-ம் தேதி கே.கே.நகர் ராஜமன்னார் சாலையில் சரோஜா(58), ஏப்ரல் 20-ம் தேதி பழைய வண்ணாரப்பேட்டையில் ஒரு பெண், பிப்ரவரி 1-ம் தேதி வள் ளுவர் கோட்டம் அருகே கார்த்தி கேயன்(35) என்ற இளைஞர் ஆகி யோர் தண்ணீர் லாரிகள் மோதிய தில் உயிரிழந்தனர். இதுபோன்ற தொடர்ச்சியான விபத்துகள், தண் ணீர் லாரிகள் முறையாக இயக்கப் படவில்லை என்பதையே காட்டு கிறது.

இதுகுறித்து தண்ணீர் லாரி ஓட்டுநர்கள் சிலர் கூறியதாவது:

ஓட்டுநர்களுக்கு பணிச்சுமை

தண்ணீர் லாரிகளுக்கு அவர்களின் ‘ட்ரிப்’புக்கு ஏற்பதான் வாடகை கொடுக்கப்படுகிறது. இத னால், தண்ணீர் லாரி ஓட்டுநர் களுக்கு ஏற்படும் பணிச்சுமை, நீரேற்றும் நிலையங்களில் வரிசை யில் நீண்ட நேரம் காத்திருப்பது போன்ற காரணங்களால் லாரியை வேகமாக இயக்கும் நிலை ஏற்படு கிறது. ஓட்டுநர்களின் அவசரமும், வேகமுமே விபத்துக்குக் காரணம் என்பதை மறுக்க முடியாது. இதற் குத் தீர்வாக நீரேற்றும் நிலையங் களையும், ஓட்டுநர்களின் வாடகை யையும் அதிகப்படுத்த வேண்டும்.

மேலும், தண்ணீர் டேங்கர் லாரி களை ஓட்டும்போது திரவப் பொருட் கள் சமநிலையில் இல்லாமல் இயக்க நிலையில் இருப்பதால் அவ் வகை லாரிகளை இயக்க தனித் திறன் வேண்டும். தண்ணீர் லாரி களில் பிரேக் அடிக்கடி பழுதுபடும். பிரேக் போடும்போது டேங்கில் இருக்கும் தண்ணீர் அசைவு ஏற்படும். அப்போது லாரியை நாம் நினைக்கும் இடத்தில் நிறுத்த முடியாது. சிறிது தூரம் சென்ற பிறகே நிற்கும். இதனாலும் விபத்து கள் ஏற்படும். ஒரு நாளைக்கு 8 முதல் 10 ‘ட்ரிப்’புகள் ஓட்டு கிறோம். சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசல் இருப் பதால் வேகமாகச் செல்ல முடியாது. ஆனால், தண்ணீர் முன்பதிவு செய் தவர்களில் சிலர் அவசரப்படுத்தும் போது வேகமாகச் செல்ல நேரிடு கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

24 மணி நேரமும் அனுமதி

காவல்துறை அதிகாரிகள் கூறும்போது, “சென்னை மாநகருக் குள் தண்ணீர் லாரிகள் இயங்க நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந் தது. காலை 8 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் தண்ணீர் லாரிகள் இயங்க அனு மதிக்கப்படவில்லை. தற்போது சென்னை மாநகரில் ஏற்பட்ட தண் ணீர் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டும், பள்ளிகளுக்கு விடு முறை விடப்பட்டுள்ளதை மனதில் வைத்தும் 24 மணி நேரமும் தண்ணீர் லாரிகளை இயக்க போக்குவரத்து போலீசார் அனுமதி வழங்கினர். ஆனால், கடந்த 4 மாதங்களில் தண்ணீர் லாரிகள் மோதியதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, குடிநீர் வாரிய ஒப்பந்தத்தில் உள்ள தண் ணீர் லாரி உரிமையாளர்கள் மற்றும் தனியார் தண்ணீர் லாரி உரிமை யாளர்களை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு நேரில் வரவழைத்து, சில ஆலோ சனைகளை வழங்கினோம். லாரி ஓட்டுநர்களையும் வரவழைத்துப் பேசினோம். விபத்துகளைத் தடுப்பது குறித்தும், நகருக்குள் மெதுவாகச் செல்வது குறித்தும் ஓட்டுநர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. ஓட்டுநரின் கவனக்குறைவால் மட்டுமே விபத்து நடந்திருப்பது உறுதி செய்யப் பட்டால், அவரது ஓட்டுநர் உரி மத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும் என்றும் எச்சரித்துள் ளோம்’’ என்றனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close