[X] Close

அதிமுக ஆட்சியை கவிழ்க்க திமுக, அமமுக நடத்திய ரகசிய பேரம்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்


  • kamadenu
  • Posted: 10 May, 2019 08:55 am
  • அ+ அ-

"அதிமுக அரசை கவிழ்க்க திமுக, அமமுக நடத்திய ரகசிய பேரத்தை தங்க தமிழ்ச்செல்வன் அம்பலப்படுத்தியுள்ளார்" என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் எஸ்.முனியாண்டியை ஆதரித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சீனிவாசா காலனி, மேலக்குயில்குடி, வடிவேல்கரை, முத்துப்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சரியில்லை என்றும், மே 23-க்குப் பின் இந்த ஆட்சி இருக்காது என்றும் கிளி ஜோதிடர் போல் பேசி வருகிறார். மே 23-க்குப்பின் திமுக தான் நிலைகுலைந்து போகும்.

ஸ்டாலினும், துரோகி டி.டி.வி.தினகரனும் மறைமுக உடன்பாடு வைத்துக்கொண்டு அதிமுக ஆட்சியை அகற்ற நினைக்கின்றனர். 2018-ம் ஆண்டு அக்.30-ம் தேதி மதுரையிலிலுள்ள தனியார் ஓட்டலில் 2 பேரும் ரகசியமாக சந்தித்து பேசியதை ஊடகங்கள் வெளிப்படுத்தின. அப்போது அதை 2 பேரும் மறு த்தனர்.

ஆனால், இன்று திமுக.வுடன் இணைந்து அதிமுக ஆட்சியை கவிழ்ப்போம் என அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். இதன்மூலம் அன்றைக்கே அவர்கள் நடத்திய ரகசிய பேரத்தை தங்க தமிழ்ச்செல்வன் அம்பலப்படுத்தியுள்ளார். இது போன்றவர்களுக்கு திருப்பரங் குன்றம் வாக்காளர்கள் தக்க பதிலை தர வேண்டும். திருப்பரங்குன்றம் தொகுதியில் அனைத்து நலத் திட்டங்களும் முழுமையாக நிறை வேற்றப்பட்டுள்ளன. எய்ம்ஸ் மருத்துவமனை, துணைக்கோள் நகரம் இத் தொகுதியில் அமைவது போன்ற பல சாதனைகளை படைத் துள்ளோம். இங்கு அதிமுக மிகப் பெரிய வெற்றிபெறும். திமுகவும், அமமுகவும் டெபாசிட் இழந்து காணாமல் போய்விடும் என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'தும்பா' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close