[X] Close

அனைத்து சாதி, மதங்களுக்கும் பொதுவானது அதிமுக: அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேச்சு


  • kamadenu
  • Posted: 10 May, 2019 08:58 am
  • அ+ அ-

அதிமுக எப்போதும் அனைத்து சாதி, மதங்களுக்கும் பொதுவானது என அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசினார்.

திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் நாகமலை புதுக்கோட்டை பகுதி தேர்தல் பொறுப்பாளராக அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். அதிமுக வேட்பாளர் எஸ்.முனியாண்டியை ஆதரித்து நேற்று அவர் பேசிய தாவது: திமுக தலைவர் முக.ஸ்டாலின் வரும் 23-ம் தேதிக்குப் பின் அதிமுக ஆட்சி இருக்காது என்கிறார்.

மு.க.அழகிரி 2011-ம் ஆண்டுக்குப் பின் அதிமுக இருக்காது என்றார். ஆனால், இன்றைக்கு அதிமுக ஆட்சி உள்ளது. அழகிரி எங்கே இருக்கிறார் என யாருக்கும் தெரிய வில்லை. இதைப்போலத்தான் வரும் 23-ம் தேதி 39 மக்களவை, 22 சட்டப்பேரவை தொகுதிகளில் திமுக மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்கும். அப்போது ஸ்டாலின் காணாமல் போய்விடுவார். அதிமுக ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு சரியில்லை என ஸ்டாலின் கூறுகிறார். 2006- 2011-ம் ஆண்டு வரை ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தபோது அழகிரிக்கு பயந்து, மதுரை பக்கமே வர முடியவில்லை. பத்திரிகை அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்டு, 3 ஊழி யர்கள் கொல்லப்பட்டனர். தங்க தமிழ்ச்செல்வன், திமுக.வுடன் சேர்ந்துகொண்டு அதிமுக அரசை கவிழ்ப்போம் என்கிறார். திமுக என்ன நினைக்கிறதோ அதைத்தான் தினசரி ஊட கங்களிடம் பேசி வருகிறார். அவர் அமமுக கொள்கை பரப்புச் செயலாளரா? திமுக கொள்கை பரப்புச் செயலாளரா? என்பதைக் கூற வேண்டும்.

22 தொகுதிகளிலும் திமுக வெற்றிபெறும் என்பவர்கள் ஏன் உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டும். தோல்வி பயம்தான் காரணம். திருப்பரங்குன்றம் தொகுதியில் அமமுக டெபாசிட் இழந்தால், கட்சியின் அங்கீகாரத்தை அவர் களே ரத்து செய்வார்களா? டிடிவி.தினகரன் 10 ஆண்டுகளாக எங்கே இருந்தார். தற்போது குறிப்பிட்ட சமூகத்தை வைத்து அரசியல் செய்கிறார். அது ஒருபோதும் நிலைக்காது. அதிமுக அனைத்து சாதி, மதங்களுக்கும் பொதுவானது. மக்கள் எங்களை ஆதரிக்க வேண்டும் என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close