[X] Close

மதுரை அரசு மருத்துவமனையில் 5 நோயாளிகள் மரணம்: சுகாதாரத்துறைக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்


5

  • kamadenu
  • Posted: 09 May, 2019 17:50 pm
  • அ+ அ-

மதுரையில் மின்தடை காரணமாக வென்டிலேட்டர் இயங்காமல் 5 நோயாளிகள் உயிரிழந்ததாக கூறப்பட்ட விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ள மாநில மனித உரிமை ஆணையம், விளக்கம் கேட்டு சுகாதாரத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் திடீர் மின்வெட்டு காரணமாக வென்டிலேட்டர் இயங்காமல் 5 நோயாளிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. மின்வெட்டு ஏற்பட்ட நேரத்தில் ஜெனரேட்டரும் இயங்காததால் உயிரிழப்பு ஏற்பட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

இதை மருத்துவமனை டீன் மறுத்திருந்தார். இந்நிலையில் இந்த விவகாரம் ஊட்கங்களில் வெளியானது. அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த 5 நோயாளிகள் இறந்தது குறித்து வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அவசர சிகிச்சை பிரிவில் இருந்த ஐந்து நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நான்கு வாரங்களில் அறிக்கை அளிக்க தமிழக சுகாதாரத்துறை செயலாளருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சம்பவம் குறித்து விசாரித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மருத்துவக் கல்வி இயக்குனருக்கும் உத்தரவிட்டுள்ளது. பிரபல நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் மனித உரிமை ஆணையத் தலைவர் நீதிபதி மீனாகுமாரி, தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து  இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close