[X] Close

தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணையப் போகிறார்: அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி


  • kamadenu
  • Posted: 09 May, 2019 10:37 am
  • அ+ அ-

அமமுகவின் தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணையப் போவதாக, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரை திருப்பரங்குன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, "தினகரன் அருகில் இருந்துகொண்டே, அவருக்கு எதிரானவற்றை தங்க தமிழ்ச்செல்வன் சொல்லிக் கொண்டிருக்கிறார். தினகரனின் வளர்ச்சிக்கோ, அவருக்கு ஆதரவாகவோ அவர் பேசவில்லை.

தங்க தமிழ்ச்செல்வன் அடுத்தகட்டமாக திமுகவுக்குச் செல்வார் என்பதையே அவருடைய பேட்டிகள் உணர்த்துகின்றன. செந்தில் பாலாஜிக்கு அடுத்தபடியாக தங்க தமிழ்ச்செல்வன் திமுகவுக்கு செல்வார் என்பதையே அவருடைய வார்த்தைகள் உணர்த்துகின்றன" என தெரிவித்தார்.

முன்னதாக, தங்க தமிழ்ச்செல்வன், 22 சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று திமுகவுடன் சேர்ந்து அதிமுக ஆட்சியைக் கவிழ்ப்போம் எனவும், ஆட்சிக் கவிழ்ப்புக்கு திமுக உதவ வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close