[X] Close

மே 23-க்கு பிறகு தமிழக அரசியலில் திருப்பம்: தங்க தமிழ்ச்செல்வன் நம்பிக்கை


23

  • kamadenu
  • Posted: 09 May, 2019 09:41 am
  • அ+ அ-

அதிமுகவின் சகாப்தம் முடி வடைந்துவிட்டது. 23-ம் தேதிக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சியைக் கலைக்க திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இயல்பாகவே ‘கை’ கொடுக்கும், தமிழகத்தில் அரசியல் திருப்பம் ஏற்படும் என்று அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்தார். திருப்பரங்குன்றத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வாரணாசியில் மோடியை பன்னீர்செல்வம் சந்தித்தபோது வாக்கு இயந்திரங்கள் மாற்றப்பட வாய்ப்பு உள்ளதா என்று சந்தேகித்து கேள்வி எழுப்பினோம். தற்போது தேனியில் 50 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்திருப்பது எங்கள் சந் தேகத்தை மேலும் அதிகரிக்கிறது.

தமிழகத்தில் கே.பழனிசாமி ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று நாங்கள் சொல்வது நியா யம்தான். அதற்கு அனைத்துக் கட்சியினரும் கரம் நீட்டுவது இயல்பானது. அதற்காக திமு கவுடன் கூட்டணி சேர்ந்து விட் டோம் என்று சொல்வது தவறு. வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு ஆட்சி கலைக்கப்படும். அதற்கான அடுத்தகட்ட நடவடிக்கையாக அமமுக ஆட்சி டிடிவி தினகரன் தலைமையில் அமைக்கப்படும். தமிழகத்தில் அரசியல் திருப்பம் ஏற்படும். 22 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தால் நிச்சயமாக அதிமுக பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படும். அப்போது ஆட்சியைக் கலைப்பதற்கு அனைத்து எதிர்க் கட்சியினரும் இயல்பாகவே கை கொடுப்பார்கள். அதற்குக் கூட் டணி என்ற பெயர் இல்லை.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, தமிழகத்தில் அதிமுக ஆட்சி மிக மோசமான நிர்வாகத்தை நடத்துகிறது. மே 23-ம் தேதிக்குப் பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். அதிமுக 22 தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே ஆட்சி தொடரும். ஆனால், அவர்களால் எப்படி வெற்றிபெற முடியும். அதிமுகவின் சகாப்தம் முடி வடைந்துவிட்டது. பாஜக தமி ழகத்தில் காலூன்ற வாய்ப்பே இல்லை. இவ்வாறு தங்க தமிழ்ச் செல்வன் கூறினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close