கூடங்குளம்: இரண்டாவது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்!


கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இரண்டாவது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது.

கூடங்குளத்தில் உள்ள இரண்டாவது அணு உலையில் கடந்த மே மாதம் 13 ஆம் தேதி வருடாந்திர பராமரிப்பு பணிக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. பராமரிப்பு பணி முடித்து இன்று காலை ஐந்து மணியளவில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.

தற்போது 300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு படிப்படியாக இன்று மாலைக்குள் இரண்டாவது அணு உலையில் ஆயிரம் மெகாவாட்டை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, முதல் அணு உலையில் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.