[X] Close

பிளஸ் 1 தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் பள்ளிகள் 93.5% தேர்ச்சி


1-93-5

  • kamadenu
  • Posted: 08 May, 2019 14:51 pm
  • அ+ அ-

பிளஸ் 1 பொதுத்தேர்வில் சென்னை மாநகராட்சயின் கீழ் இயங்கும் பள்ளிகள் 93.52 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. ஒரு பள்ளி மட்டும் 100 சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ளன.

இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், விடுத்துள்ள அறிவிப்பு:

''சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் 32 சென்னை மேல்நிலைப் பள்ளிகள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளின் வாயிலாக 2018-19 ஆம் கல்வியாண்டில் பயின்று, மார்ச் 2019-ல் பிளஸ் 1 பொதுத்தேர்வில் 1,743 மாணவர்கள், 3,090 மாணவியர்கள் என மொத்தம் 4,833 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதினர்.

இவர்களில் 1,565 மாணவர்கள், 2,955 மாணவியர்கள் என மொத்தம் 4,520 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை பள்ளிகளில் பிளஸ் 1 பொதுத்தேர்வில் மொத்த தேர்ச்சி சதவீதம் 93.52 ஆகும். இவற்றில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 89.79, மாணவியர்களின் தேர்ச்சி சதவீதம் 95.63 ஆகும்.

2018-19ஆம்  கல்வி ஆண்டில் ஒரு பள்ளி 100  சதவீதம் தேர்ச்சி விழுக்காடு பெற்றுள்ளது. ஒரு மாணவி 100/100  மதிப்பெண் பெற்றுள்ளார். ஐநூற்றுக்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் மொத்தம் 14 பேர்.

நானூற்று ஐம்பதுக்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் 74 பேர். நெசப்பாக்கம் சென்னை மேல்நிலைப்பள்ளி, 100 சதவீதம் தேர்ச்சி விழுக்காடு பெற்றுள்ளது''. 

இவ்வாறு சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close