[X] Close

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்கள் இருவரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: தமிழக காங்கிரஸ் அறிவிப்பு


2

  • kamadenu
  • Posted: 08 May, 2019 12:22 pm
  • அ+ அ-

புல்வாமா தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்கள் இருவரின் குடும்பங்களுக்கு தமிழக காங்கிரஸ் தலா ரூபாய் 2 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற புல்வாமா தீவிரவாதத் தாக்குதலில் 45 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இதில், தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் சவலப்பேரியைச் சேர்ந்த சுப்பிரமணியன் (28), அரியலூரைச் சேர்ந்த சிவசந்திரன் ஆகிய இரு வீரர்களும் உயிரிழந்தனர்.

இந்நிலையில், உயிரிழந்த தமிழக வீரர்களின் குடும்பங்களுக்கு தமிழக காங்கிரஸ் நிதியுதவி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிவிப்பில், "ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் தீவிரவாதிகளின் தாக்குதலால் வீர மரணமடைந்த  வீரர்களில் தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம், சவலப்பேரி கிராமத்தைச் சேர்ந்த ஜி.சுப்ரமணியம், அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்தைச் சேர்ந்த சிவசந்திரன் ஆகியோரின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை சார்பாக தலா ரூபாய் 2 லட்சம் வழங்கப்படுகிறது" என தெரிவித்துள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close