[X] Close

பெரும்பாலான மக்கள் செல்போனுக்கு அடிமை ஆகி குழந்தைகளை கவனிப்பதில்லை: லதா ரஜினிகாந்த்


  • kamadenu
  • Posted: 07 May, 2019 21:27 pm
  • அ+ அ-

குழந்தைகள் வளர்ப்பு பெற்றோர்களின் கண்காணிப்பில் உள்ளது அவர்களுடைய  கண்பார்வையிலேயே அது இருக்க வேண்டும் என லதா ரஜினிகாந்த் தெரிவித்தார்.

குழந்தைகள் பாதுகாப்பு பற்றி லதா ரஜினிகாந்த் அவர்களின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது .

நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் குழந்தைகள் கடத்தல் தடுப்பு குறித்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். சமீபத்தில் சாலையோர குழந்தைகள் கடத்தப்பட்ட விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தில் லதா ரஜினிகாந்த், நடிகர் பார்த்திபன் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.

குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தைகள் கடத்தல் தடுப்பு உள்ளிட்ட பிரச்சினைகளில் கவனம் செலுத்திவரும் லதா ரஜினிகாந்த் அதற்காக குழந்தைகளுக்கான அமைப்பு ஒன்றை (peace for childrens) என்ற அமைப்பை உருவாக்கியுள்ளார். அதுகுறித்த செய்தியாளர் சந்திப்பில் லதா ரஜினிகாந்த் கூறியவை :

அண்மையில் தமிழ்நாட்டில், இந்தியாவில் குழந்தைகள் காணாமல் போவதும், கடத்தப்படுவதும், ஆதரவற்று இருப்பதும், கொல்லப்படுவதும்  இதுபோன்ற விஷயங்கள் நடந்து வருவதை  நினைத்துப்பார்த்தால் மனம் தாங்கவில்லை.  நம்மை சுற்றி இருக்கும் குழந்தைகளும், ஆதரவற்ற  குழந்தைகளும் பாதுகாக்க வேண்டியது நம் சமுதாயத்தின் முதல் கடமை.

உங்கள் குழந்தைகளுக்கு என்ன வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்களோ அது நம் சமுதாயத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் நம் அனைவரின் மனதிலும் வர வேண்டும் .

அந்தக்காலத்தில் ஒருவர் வீட்டில் இருக்கும் குழந்தையை பற்றி பக்கத்துக்கு வீட்டு ஆட்களுக்கு தெரியும் . ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்தார்கள். அப்பொழுது ஒரு பாதுகாப்பு வளையம் இயற்கையாகவே இருந்தது. தற்போது அந்த மாதிரியான எண்ணங்கள் மிக குறைவாகவே உள்ளது.

குழந்தைகள் பாதுகாப்பு, அக்கறை பற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் வேண்டும் .ஊடகங்கள் நினைத்தால் இந்த செய்தியை, விழிப்புணர்வை லட்சக்கணக்கான  மற்றும் கோடிக்கணக்கான மக்களுக்கு எடுத்து செல்லலாம்.

குழந்தைகள் வளர்ப்பு பெற்றோர்களின் கண்காணிப்பில் உள்ளது அவர்களுடைய  கண்பார்வையிலேயே அது இருக்க வேண்டும் . எனக்கும் அதற்கும் சம்மந்தம் இல்லை என்று சொல்ல கூடாது .நம் இந்திய கலாச்சாரமே ஒருவருக்கொருவர் பங்கிட்டு வாழ்வது தான் . குழந்தைகள் பாதுகாப்பிலும் அப்படிப்பட்ட எண்ணம் நம் அனைவருக்கும் வர வேண்டும்.

தற்போது டெக்னலாஜி பெரியதாக வளர்ந்து விட்டது. பெரும்பாலான மக்கள் செல்போனுக்கு அடிமை ஆகிவிட்டார்கள் . இதனால்கூட குழந்தைகள் பாதுகாப்பில் கவனக்குறைவு ஏற்படுகிறது.

எங்கள் அமைப்பின் மூலம் குழந்தை கல்வி, குழந்தை காணாமல் போகுதல்,  குழந்தைகளுக்கான பல பிரச்சனைகளை தீர்வு கொண்டு வருகின்றோம். இந்த மாதிரியான விஷயங்களை செய்தித்தாள்கள் மூலமாகவோ , அல்லது கிடைக்கும் தகவல்களை வைத்து எங்கள் அமைப்பின் குழுவினர்கள் அந்தந்த இடத்திற்கு சென்று உதவிகளை செய்து வருகிறார்கள் .

ஆனால் பல தகவல்கள் முழுமையாக வராமல், தொலைபேசி எண்ணோ அல்லது தொடர்பாளர் முகவரியோ இல்லாமல் பல செய்திகள் கிடைக்கிறது . எங்கள்  அமைப்பு மகாராஷ்டிரா, புனே போன்ற பகுதிகளிலும் நிறுவப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டத்திலும் நிறுவியுள்ளோம் .குழந்தைகள் பிரச்னை சம்மந்தப்பட்ட எல்லா செய்திகளும் வெளியே தெரிவதில்லை . அப்படி தெரியவராத செய்திகளை அந்தந்த ஊர்களில் இருக்கும் எங்கள் அமைப்பையோ அல்லது எங்களது செல்போன் எண்னை அழைத்து தகவலை பகிரலாம்.

நீங்கள் உங்கள் ஊரில் இது போன்று அமைப்பை உருவாக்கி குழந்தைகளுக்காக பாதுகாப்பு வளையத்தை உருவாக்க நினைத்தால் எங்களை தொடர்பு கொள்ளலாம் . அதற்கான வழிமுறைகளை நாங்கள் சொல்ல தயாராக இருக்கிறோம்”

இவ்வாறு லதா ரஜினிகாந்த் தெரிவித்தார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close