[X] Close

பொய் சொல்வதற்கு ஸ்டாலினுக்கு நோபல் பரிசு வழங்கலாம்: முதல்வர் பழனிசாமி கிண்டல்


  • kamadenu
  • Posted: 07 May, 2019 15:26 pm
  • அ+ அ-

-ஒய்.ஆண்டனி செல்வராஜ்

‘‘ஒரு அரசியல்வாதிக்கு பொய் சொல்வதற்கு நோபல் பரிசு வழங்க வேண்டுமென்றால் அதை ஸ்டாலினுக்கு வழங்கலாம் ’’ என்று திருப்பரங்குன்றம் தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எஸ்.முனியாண்டியை ஆதரித்து முதல்வர் கே.பழனிசாமி நேற்று மாலை பிரச்சாரம் செய்தார். திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்டவிரகனூர், ஐராவதநல்லூரியில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

''திருப்பரங்குன்றம் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் எஃகு கோட்டை. இந்தக் கோட்டையை திமுகவால் தகர்க்க முடியாது. கடந்த திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் நேரத்தில் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் உடல் நலம் குன்றி சிகிச்சை பெற்றார். அப்போது அதிமுக வேட்பாளர் வேட்புமனுவுடன் இணைக்கப்பட்ட படிவத்தில் ஜெயலலிதாவின் கைரேகை நோடல் ஆபீசர் டாக்டர் பாலாஜி முன்னிலையில்தான் பெறப்பட்டது. நீதிமன்றம் எந்த இடத்திலும் ஜெயலலிதாவின் கைரேகை போலி, முறைகேடு என்று குறிப்பிடவில்லைல. அந்த ரேகை வாங்கிய முறையில்தான் தவறு இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தது.

ஆனால், ஜெயலலிதாவின் கைரேகை போலி, முறைகேடு என்று எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் சிறுபிள்ளைபோல் இங்கிதம் இல்லாமல் பொய் பிரச்சாரம் சொல்கிறார். அவருக்கு எப்படிப் பேசுவது என்றே தெரியவில்லை. அவரது பிரச்சாரமும் மக்களிடமும் எடுப்படவில்லை. மத்திய, மாநில அரசுகள் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெருக்கவில்லை என்று ஸ்டாலின் சொல்கிறார்.

அதிமுக, மத்திய பாஜக அரசுக்கு ஆதரவு மட்டுமே கொடுத்துள்ளது. நாங்கள் மத்திய அரசில் பங்கேற்கவில்லை. ஆனால், திமுக காங்கிரஸுடன் 14 ஆண்டுகள் ஆட்சியில் பங்கேற்றது. அவர்கள் இளைஞர்கள் வேலைவாய்ப்பிற்கு என்ன செய்துள்ளனர். எத்தனை பேருக்கு அவர்கள் வேலைவாய்ப்பு வாங்கிக் கொடுத்துள்ளனர். அவர்கள் குடும்பத்திற்கு வேண்டுமென்றால் அவரரும், அவரது தந்தையும் பதவிகளையும், சலுகைகளையும், திட்டங்களையும் வாங்கிக் கொடுத்திருப்பார்கள்.  வேண்டுமென்றே அப்பட்டமாகத் திட்டமிட்டு ஸ்டாலின் இந்த இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தொடர்ந்து பொய் குற்றச்சாட்டுகளை சொல்லி வருகிறார். ஒரு அரசியல்வாதிக்கு பொய் பேசுவதற்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டுமென்றால் அதை ஸ்டாலினுக்குக் கொடுக்கலாம்.

தைப்பொங்கல் அன்று தமிழக மக்கள் அந்தப் பண்டிகையை உற்சாகமாக கொண்டாட வேண்டும் என்று ரூ.1000 கொடுத்தோம். தற்போது ஏழைத் தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் கொடுப்பதாக அறிவித்து அதை நான் தொடங்கி வைத்தேன். ஸ்டாலின், நீதிமன்றத்திற்குச் சென்று ஏழைத் தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் கொடுக்கவிடாமல் நிறுத்தி வைத்துள்ளார். ஏழைகளுக்குக் கொடுப்பதை தடுக்கும் ஒரே கட்சி திமுக. அவர் வீதி வீதியாக போய் பொய் பிரச்சாரம் செய்கிறார். மக்களுக்கு நல்லது செய்வதைத் தடுக்கும் திமுகவுக்கு இந்த இடைத்தேர்தலில் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும். திருப்பரங்குன்றம் பகுதியில்தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமைகிறது. இதுபோன்ற பல திட்டங்களை தமிழக அரசு திருப்பரங்குன்றம் தொகுதிக்கு வழங்கியுள்ளது''.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி  பேசினார்.

வாக்களிக்கலாம் வாங்க

'தும்பா' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close