[X] Close

புயலால் மேலும் 5 விரைவு ரயில்கள் ரத்து


5

  • kamadenu
  • Posted: 07 May, 2019 07:05 am
  • அ+ அ-

ஃபானி புயல் பாதிப்பினால் மேலும் 5 விரைவு ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்குரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:ஹவுரா - யஸ்வந்த்பூர் ஹம்சபர் (22887) விரைவு ரயில், எர்ணாகுளம் - பாட்னா வாரம் இருமுறை செல்லும் ரயில் (22643), எர்ணாகுளம் - ஹவுரா அந்த்யோதயா வாராந்திர ரயில் (22878) ஆகிய ரயில்களின் இன்றைய சேவை (7-ம் தேதி) ரத்து செய்யப்படுகிறது.

சென்னை சென்ட்ரல் (எம்ஜிஆர் ரயில் நிலையம்) - ஜல்பைகுரி வாராந்திர ரயில் (22611), சென்னை சென்ட்ரல் - சந்திரகாச்சி (82614) ஆகிய ரயில்களின் நாளை (8-ம் தேதி) சேவை ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close