[X] Close

குழந்தைகள் சட்டவிரோத விற்பனை வழக்கில் சிபிசிஐடியிடம் ஆவணங்கள் ஒப்படைப்பு


  • kamadenu
  • Posted: 04 May, 2019 07:16 am
  • அ+ அ-

குழந்தைகளை சட்டவிரோதமாக வாங்கி விற்பனை செய்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

குழந்தைகளை சட்டவிரோதமாக வாங்கி விற்பனை செய்த வழக்கில், நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த தட்டான்குட்டை, காட்டூர் காட்டுக்கொட்டாயைச் சேர்ந்த ஓய்வுபெற்ற செவிலியர் உதவியாளர் அமுதவல்லி (50), அவரது கணவர் ரவிச்சந்திரன், (55), அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன், தரகர்களாகச் செயல்பட்ட ஈரோட்டைச் சேர்ந்த பர்வீன், அருள்சாமி, ஹசீனா, லீலா, பவானி செல்வி ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராசிபுரம் போலீஸார் இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில், சிபிசிஐடி-க்கு மாற்றி, தமிழக டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

இதையடுத்து, சிபிசிஐடி, டிஎஸ்பி கிருஷ்ணன் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் பிருந்தா, சாரதா ஆகியோர், நாமக்கல் எஸ்.பி. அருளரசுவை நேரில் சந்தித்தனர். அப்போது, குழந்தைகள் விற்பனை வழக்கு தொடர்பான ஆவணங்கள் டிஎஸ்பி கிருஷ்ணனிடம் ஒப்படைக்கப்பட்டன. இனிமேல், இவ்வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரிக்கஉள்ளனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close