[X] Close

சூரியனை ஆராயும் வகையில் ‘ஆதித்யா எல்-1’ விண்கலத்தை ஏவ திட்டம்: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்


1

  • kamadenu
  • Posted: 04 May, 2019 07:14 am
  • அ+ அ-

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சூரியனை ஆராயும் வகையில்‘ஆதித்யா எல்-1’ என்ற விண்கலத்தை ஏவ திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.

இஸ்ரோ தலைவர் சிவன் தனதுசொந்த கிராமமான நாகர்கோவிலை அடுத்த சரக்கல் விளையில் நடைபெற்ற முத்தாரம்மன் கோயில் விழாவில் பங்கேற்றார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

ஃபானி புயல் குறித்து துல்லியமாக கணிக்க முயன்றதால் உயிர்ச்சேதம் உட்பட பெரும் பாதிப்புஏற்படாத வகையில் முன்னேற்பாடுகளைச் செய்ய முடிந்தது. சந்திராயன்-2 விண்கலம் ஜூலை 9-ம் தேதி முதல் 16-ம் தேதிக்குள் விண்ணில் ஏவப்படும். செப்டம்பர் 6-ம் தேதி அந்த விண்கலம் நிலவில்இறங்கும். நிலவின் தென்துருவத்தில் அது இறங்கும் வகையில் திட்டங்களை வகுத்துள்ளோம்.

இந்த விண்கலம் நிலவில் தரையிறங்கிய பின்னர் அங்குள்ள நிலப்பரப்பு குறித்த ஆய்வு தொடங்கும். இந்த ஆய்வு முடிவுகளை அறிய உலக விஞ்ஞானிகள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

ஆதித்யா எல்-1 விண்கலம்

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சூரியனை ஆராயும் வகையில் ‘ஆதித்யா எல்-1’ என்ற விண்கலத்தை ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சூரியனைபற்றி இதுவரை வெளிவராத பலதகவல்களை அறிய முடியும். விண்வெளிக்கு மனிதனை அனுப்பும்திட்டத்தை செயல்படுத்துவதற்கான திட்ட வடிவமைப்பு நிறைவு பெற்றுள்ளது. வரும் 2022-ம் ஆண்டுக்குள் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

மாணவர்களுக்கு பயிற்சி

விண்வெளி ஆராய்ச்சி குறித்து இந்திய மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சிகளை அளிக்கஇஸ்ரோ முடிவு செய்துள்ளது. ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப்பட்ட 108 மாணவ, மாணவிகளுக்கு இப்பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close