[X] Close

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை


12

  • kamadenu
  • Posted: 04 May, 2019 06:50 am
  • அ+ அ-

சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:

வங்கக் கடலில் நிலவிய ஃபானிபுயல் காரணமாக தமிழகத்துக்கு வரும் கிழக்கு திசைக் காற்று வலுவாக இல்லை. தற்போது மேற்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் இருந்து வறண்ட காற்று வீசுகிறது. நேற்று மாலை 5.30 மணிக்கு எடுக்கப்பட்ட வெப்பநிலை அளவின்படி, வேலூர், திருத்தணியில் தலா 111 டிகிரி, சென்னை விமான நிலையத்தில் 108 டிகிரி, திருச்சி, மதுரை விமான நிலையத்தில் 107 டிகிரி, மதுரை மற்றும் கரூர் பரமத்தியில் தலா 104 டிகிரி, சென்னை நுங்கம்பாக்கம், பாளையங்கோட்டையில் தலா 103 டிகிரி, பரங்கிப்பேட்டையில் 102 டிகிரி, நாகப்பட்டினம், காரைக்கால், தருமபுரி ஆகிய இடங்களில் தலா 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.

சென்னை, திருவள்ளூர், வேலூர், தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல்,புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை ஆகிய 12 மாவட்டங்களில் ஒருசில பகுதிகளில் இன்று வெப்ப அலை வீச வாய்ப்புள்ளது.

சென்னையில் வானம் தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 106 டிகிரி,குறைந்தபட்சமாக 86 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவாக வாய்ப்புள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close