[X] Close

3 அதிமுக எம்.எல்.ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு: சட்டப்பேரவை தலைவர் நடவடிக்கைக்கு தடைகேட்டு முறையீடு-விரைவில் விசாரணை


3

  • kamadenu
  • Posted: 03 May, 2019 13:35 pm
  • அ+ அ-

தங்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டப்பேரவைத் தலைவருக்கு உரிமை இல்லை அவருக்கு தடை விதிக்க வேண்டும் என 3 அதிமுக எம்.எல்.ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் செய்த முறையீடு ஏற்கப்பட்டது. திங்கட்கிழமை வழக்கு விசாரணைக்கு வருகிறது.

கட்சி விரோத செயலில் ஈடுபட்டதாக கடந்தவாரம் கொறடா ராஜேந்திரனால் சட்டப்பேரவை தலைவரிடம் புகார் அளிக்கப்பட்ட டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் 3 பேருக்கு சட்டப் பேரவைத்தலைவர் தனபால் சமீபத்தில் நோட்டீஸ் அனுப்பினார்.

தமிழக அரசில் அதிமுக எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 136 ஆக இருந்தது. இதில் தமீமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் உள்ளிட்ட 3 பேரும் அடக்கம். ஜெயலலிதா மறைவுக்குப் பின் அது 135 ஆகக் குறைந்தது. பின்னர் அந்த இடத்தில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றார்.

டிடிவி தினகரனுக்கு ஆதரவாக 18 எம்.எல்.ஏக்கள் செயல்பட்டதால் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனால் அவர்கள் எண்ணிக்கை 117 ஆகக் குறைந்தது. பின்னர் சூலூர், திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ மறைவு, ஓசூர் எம்.எல்.ஏ தகுதி நீக்கம் காரணமாக அது 114 ஆக மேலும்  குறைந்தது.

அதிமுக எம்.எல்.ஏ.க்களில் விருத்தாச்சலம் கலைச்செல்வன், அறந்தாங்கி ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி  பிரபு ஆகியோர் அதிமுகவில் இருந்தாலும் தனி அணியாக இயங்கி வந்தனர். இவர்கள் 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க அதிமுக கொறடா சட்டப்பேரவைத்தலைவர் தனபாலிடம் மனு அளிக்க அதை ஏற்று அவர்களுக்கு சட்டப்பேர்வைத்தலைவர் நோட்டீஸ் அனுப்பினார்.

3 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை நடவடிக்கை எடுத்தால் சட்டப்பேரவைத் தலைவர்மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவருவோம் என திமுக எச்சரித்திருந்த திமுக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தது.

சட்டப்பேரவைத் தலைவர்மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்ததால் அவர் செயலற்றவராகிறார் அவர் 3 எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என எதிர்க்கட்சிகளின் வாதமாக உள்ளது.

இந்நிலையில் இதே கருத்தை வலியுறுத்தி தங்கள் மீது அதிகாரமில்லாத சட்டப்பேரவைத் தலைவர் நடவடிக்கை எடுக்க தடைவிதிக்கவேண்டும் என ரத்தின சபாபதி, கலைச்செல்வன், பிரபு சார்பில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுமுன் முறையீடு செய்யப்பட்டது.

3 எம்.எல்.ஏக்கள் சார்பில் தலைமை நீதிபதி அமர்வுமுன் மூத்த வழக்கறிஞர் கபில்சிபில் முறையீட்டை செய்தார். அவரது முறையீட்டை ஏற்ற அமர்வு வழக்கை வரும் திங்கட்கிழமை (மே.6) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உத்தரவிட்டுள்ளது.  

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close