[X] Close

பத்தாம் வகுப்பு மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்


  • kamadenu
  • Posted: 02 May, 2019 07:50 am
  • அ+ அ-

சமச்சீர் பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14 முதல் 29-ம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 9.76 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த ஏப்ரல் 29-ம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வு எழுதியதில் 95.2 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதையடுத்து தேர்வர்கள் தாங்கள் படித்த பள்ளி அல்லது தேர்வெழுதிய மையங்களில் இன்று (மே 2) முதல் தற்காலிக மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம். தொடர்ந்து மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை மே 6-ம் தேதி முதல் www.dge.tn.nic.in இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

இதுதவிர மறுகூட்டலுக்கு பள்ளி மாணவர்கள் படித்த பள்ளிகள் மூலமும், தனித்தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்கள் வழியாகவும் இன்று முதல் (மே 2) 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்போர் மொழிப் பாடங்களுக்கு ரூ.305, மற்ற பாடங்களுக்கு ரூ.205 கட்டணம் செலுத்த வேண்டும். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகை சீட்டை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், அந்த ஒப்புகை சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே தேர்வர்கள் தங்கள் மறுகூட்டல் முடிவுகளை அறிந்து கொள்ள இயலும் என தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close