[X] Close

முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு: மெட்ரோ ரயில் ஊழியர்களின் போராட்டம் வாபஸ்


  • kamadenu
  • Posted: 02 May, 2019 07:29 am
  • அ+ அ-

முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து மெட்ரோ ரயில் ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் நிரந்தரம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணிகள் நடப்பதற்கு இடையூறாக இருப்பதாகக் கூறி கடந்த 29-ம் தேதி 7 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதை கண்டித்தும், அவர்களை மீண்டும் பணியில் சேர்க்க வலியுறுத்தியும் மெட்ரோ ரயில் ஊழியர்கள் கடந்த 2 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நேற்று முன்தினம் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், மெட்ரோ ரயில் ஊழியர்கள் நேற்று பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அடுத்தகட்டமாக 2-ம் கட்ட பேச்சுவார்த்தை சென்னையில் உள்ள குறளகத்தில் நேற்று நடைபெற்றது. சுமார் 4 மணிநேரம் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில் தொழிலாளர் நலத்துறை, மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், மெட்ரோ ரயில் ஊழியர்கள் தங்களது வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.

இதுதொடர்பாக சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன் கூறும்போது, “தொழிற்சங்கம் அமைத்ததற்காக 7 நிர்வாகிகளை மெட்ரோ ரயில் நிறுவனம் வேலை நீக்கம் செய்தது தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்தை நடத்தப்பட்டது. தொழிலாளர் நலத்துறையும் இதுதொடர்பாக நல்ல முடிவெடுக்க அறிவுறுத்தியிருப்பது எங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஓரிரு நாளில் நல்ல முடிவுஇதற்கிடையே, பணி நீக்கம் செய்யப்பட்ட 7 பேரையும் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரிடம் மேல் முறையீடு செய்யுமாறு நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அடுத்த ஓரிரு நாட்களில் நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். ஊழியர்கள் மீது எந்த பழிவாங்கும் நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என தெரிவித்துள்ளோம். எனவே, போராட்டத்தில் இருந்த 240-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வியாழக்கிழமை (இன்று) பணிக்கு திரும்புவார்கள்’’ என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'தும்பா' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close