[X] Close

தகுதித் தேர்வு முடிக்காத ஆசிரியர்கள் பணியில் நீடிக்க அனுமதிக்கக் கூடாது - உயர்நீதிமன்றம் உத்தரவு


  • kamadenu
  • Posted: 01 May, 2019 16:59 pm
  • அ+ அ-

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் பணியில் நீடிக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதாத சுமார் 1500 பேருக்கு ஊதியம் கொடுக்காமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் திருவண்ணாமலையை சேர்ந்த ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதாமல் பணியில் இருக்கும் ஆசிரியர்களை, பணியில் இருந்து நீக்க தடை கோரி தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் ஆஜரான அரசு வழக்கறிஞர், , சர்வ சிக்ச அபியான் மற்றும் கல்வி உரிமை சட்டம் படி, 2011 முதல் ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம், இதன்படி, ஆசிரியர் தகுதி தேர்வு நடந்தது. தேர்வு எழுத மார்ச் 31 வரை அவகாசம் உள்ளது, பின்னர் நீட்டிக்க மத்திய அரசு மறுத்துவிட்டது என விளக்கம் அளித்தார்.

download.jpg 

இதனைத் தொடரந்து நீதிபதி உத்தரவில் தெரிவித்ததாவது:

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணியில் நீடிக்க அனுமதிக்கக்கூடாது. தேர்வு எழுத 8 ஆண்டுகள் அவகாசம் வழங்கிய பின்னரும் இனிமேல் கருணை காட்ட முடியாது. ஆசிரியர்கள் தகுதி தேர்வு எழுதி 60 ஆயிரம் பேர் வேலைக்காக காத்திருக்கின்றனர். எழுதுபவர்கள் பணியில் நீடிப்பது அனுமதிப்பது எந்த நியாயமும் இல்லை.

தேர்வு எழுதாத ஆசிரியர்களுக்கு இரண்டு வாரத்திற்குள் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். நோட்டீஸ் கிடைத்த 10 நாட்களுக்குள் ஆசிரியர்கள் அதற்கு பதில் அளி்க வேண்டும். பின்னர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி கூறினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close