[X] Close

சபாஷ் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்கள்: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு- மாநகராட்சி பள்ளிகள் 92.44% தேர்வு


10-92-44

  • kamadenu
  • Posted: 29 Apr, 2019 21:18 pm
  • அ+ அ-

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியானது. இதில் சென்னை மாநகராட்சி பள்ளிகள் 92.44 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளன. 21 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கை:

“பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் 70 சென்னை மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.  இப்பள்ளிகளின் வாயிலாக 2018-19-ம் கல்வியாண்டில் பயின்று, மார்ச் 2019-ல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 2,734 மாணவர்கள், 2,996 மாணவியர்கள் என மொத்தம் 5,730 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதி இருந்தனர்.

இவர்களில் 2,431 மாணவர்கள், 2,866 மாணவியர்கள் என மொத்தம் 5,297 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னைப் பள்ளிகளில் 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதம் 92.44 ஆகும். இவற்றில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 88.92, மாணவியர்களின் தேர்ச்சி சதவீதம் 95.66 ஆகும்.

2018-19-ம்  கல்வி ஆண்டில்..

100  சதவீதம் தேர்ச்சிப்பெற்ற மாநகராட்சிப் பள்ளிகள் -  21  

நானூற்று ஐம்பதுக்கு மேல் (Above 450/500) மதிப்பெண் பெற்றவர்கள்    - 20 பேர்

நானூறுக்கு மேல் (Above 400/500) மதிப்பெண் பெற்றவர்கள் – 213 பேர்

பாடங்களில் 100/100  மதிப்பெண் பெற்ற மாணாக்கர் விவரம்  - ஒரு மாணவன்   

100  சதவீதம் தேர்ச்சி விழுக்காடு பெற்ற பள்ளிகளின் விவரம்      

1.     சென்னை மேல்நிலைப்பள்ளி,   லாயிட்ஸ் ரோடு

2.     சென்னை மேல்நிலைப்பள்ளி,  ஆழ்வார்பேட்டை

3.     சென்னை உயர்நிலைப்பள்ளி,  குக்ஸ்  சாலை

4.     சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி,  நுங்கம்பாக்கம்

5.     சென்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,  நுங்கம்பாக்கம்

6.     சென்னை உயர்நிலைப்பள்ளி,  ரங்கராஜபுரம்

7.     சென்னை உயர்நிலைப்பள்ளி,  கே.பி.தெரு

8.     சென்னை உயர்நிலைப்பள்ளி,  வன்னிய தேனாம்பேட்டை

9.     சென்னை உயர்நிலைப்பள்ளி,  எஸ்.என். தெரு

10.    சென்னை உயர்நிலைப்பள்ளி,  சர்மா நகர்

11.    சென்னை உயர்நிலைப்பள்ளி,  எருக்கஞ்சேரி

12.    சென்னை உயர்நிலைப்பள்ளி,  திருவேங்கடசாமி தெரு

13.    சென்னை உயர்நிலைப்பள்ளி,  கொய்யத்தோப்பு

14.    சென்னை உயர்நிலைப்பள்ளி,  வால்டாக்ஸ் சாலை

15.    சென்னை உயர்நிலைப்பள்ளி,  ஜாபர்கான்பேட்டை

16.    சென்னை உயர்நிலைப்பள்ளி,  கண்ணம்மாபேட்டை

17.    சென்னை உயர்நிலைப்பள்ளி,  நம்மாழ்வார்பேட்டை

18.    சென்னை உருது உயர்நிலைப்பள்ளி,  பழைய வண்ணாரப்பேட்டை

19.    சென்னை தெலுங்கு உயர்நிலைப்பள்ளி,  ஆஞ்சிநேய நகர்

20.    சென்னை உயர்நிலைப்பள்ளி,  வி.பி.கோயில் தெரு

21.    சென்னை உயர்நிலைப்பள்ளி,  சிந்தாதிரிப்பேட்டை

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

2018-19- ம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் சென்னைப் பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 21 பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு அவர்களின் சிறந்த செயல்பாட்டை பாராட்டி பள்ளிகளின் வளர்ச்சிக்காக ரூ.1 லட்சத்துக்கான காசோலையினை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் இன்று (29.04.2019) வழங்கினார்.

மேலும், 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் ஆணையர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியின் போது துணை ஆணையாளர் (கல்வி)குமாரவேல் பாண்டியன் கல்வி அலுவலர் கோவிந்தசாமி, உதவி கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close