[X] Close

திமுக வெற்றி பெற்றால் 25 நாளில் ஆட்சி மாற்றம்; நான் பொறுப்பு: துரைமுருகன் சவால்


25

  • kamadenu
  • Posted: 29 Apr, 2019 09:09 am
  • அ+ அ-

திமுக வெற்றிப் பெற்றால் 25 நாட்களுக்குள் ஆட்சி மாற்றம் வரும். அதற்கு நான் பொறுப்பு என்று திமுக பொருளாளர் துரைமுருகன் சவால் விடுத்துள்ளார்.

சூலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பொங்கலூர் பழனிசாமியை அறிமுகப்படுத்தும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக கூட்டணி சார்பில் பலரும் கலந்து கொண்டு பேசினார்கள்.

இதில் திமுக பொருளாளர் துரைமுருகன் பேசியதாவது:

ஒரு ஓட்டுக்கு 5000, 10000 ரூபாய் கொடுத்தாவது ஜெயிக்க வேண்டும் என்று அதிமுகவினர் கணக்கு போட்டுள்ளார்கள். மக்கள் மீது நம்பிக்கை போய், பணத்தின் மீது நம்பிக்கை கொணடிருக்கிறார்கள்.

ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் 100% திமுகதான் ஜெயிக்கும். இந்த சூலூர் தொகுதியை மட்டும் ஜெயித்துக் காட்டுங்கள். இந்த ஆட்சியை 25 நாட்களுக்குள் மாற்றும் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன். சட்டசபை கூடட்டும். நான் உட்கார்ந்த இடத்திலேய தான் உட்கார்ந்திருப்பேன். ஆனால், அங்கு வெடி வெடிக்கும்.

அதிமுக நடத்தும் கூத்துகள் எல்லாம், ஓட்டு எண்ணிக்கை முடிந்த மறுநாளோடு முடிவுக்கு வரும். இந்த உலகத்தில் மோடியைப் போல் வெறுப்பை சம்பாதித்த ஒரு பிரதமரை பார்த்ததே கிடையாது. அவர் மீண்டும் பிரதமராக வருவதற்கு வாய்ப்பே கிடையாது.

இது என்னுடைய அரசியல் ஜோதிடம் அல்ல, அரசியல் அனுபவம். இன்னுமொரு 3 திங்களுக்குள் உரிமைப் பெற்ற தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஸ்டாலின் அவர்கள் அமர்வார். ஸ்டாலின் என்ற பெயர் இந்தியாவின் எட்டுத்திக்கிலும் எதிரொலிக்கிறது.

இவ்வாறு துரைமுருகன் பேசினார்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close