[X] Close

தடகள போட்டியில் தங்கம் வென்ற கோமதிக்கு ரூ.10 லட்சம் வழங்கி மு.க.ஸ்டாலின் பாராட்டு


10

  • kamadenu
  • Posted: 29 Apr, 2019 08:04 am
  • அ+ அ-

ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்றுள்ள கோமதிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நேற்று ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.

தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை கோமதி மாரிமுத்து தங்கம் வென்றார். அவரை விளையாட்டுத் துறையில் உற்சாகப்படுத்தும் வகையில் திமுக சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுகதலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கோமதி மாரிமுத்துவுக்கு மு.க. ஸ்டாலின் நேற்று ரூ.10 லட்சம் வழங்கி பாராட்டு தெரிவித்தார். அப்போது, திமுககொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா, சட்ட ஆலோசகர் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ உள்ளிட்ட பலர் உடனி ருந்தனர்.

ஊக்கமளிக்கிறது

இதையடுத்து, கோமதி மாரிமுத்து செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்றதால் பரிசு தொகை கொடுத்திருப்பது ஊக்கமாக இருக்கிறது. என்னைப் போன்று கஷ்டப்படும் வீரர், வீராங்கனைகளுக்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும். ஒலிம்பிக் போட்டிக்காக தயாராகிக் கொண்டிருக்கிறேன். இதற்கு தமிழக அரசு ஆதரவு அளித்து வருகிறது. பலரும் எனக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெற்றதும் நான் பயிற்சியாளராகி மற்றவர்களுக்கு பயிற்சி அளிக்க விரும்புகிறேன். என்னைவிட வறுமையில் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு தமிழக அரசு உதவினாலே மகிழ்ச்சியாக இருக் கும். கிராமங்களில் இருக்கும் காலியிடங்களைத் தேர்வு செய்துவிளையாட்டு மைதானம் அமைத்தால், சிறுவர்கள், இளைஞர்கள் பயிற்சி பெற வசதியாக இருக்கும்’’ என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close