[X] Close

தங்கம் விலை பவுனுக்கு ரூ.176 உயர்வு


176

  • kamadenu
  • Posted: 26 Apr, 2019 07:38 am
  • அ+ அ-

சென்னையில் தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.176 உயர்ந்து 24 ஆயிரத்து 336-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சர்வதேச அளவில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. சென்னையில் நேற்றைய நிலவரப்படி தங்கம் பவுனுக்கு ரூ.176 உயர்ந்து ரூ.24 ஆயிரத்து 336-க்கு விற்கப்பட்டது.

22 கேரட் தங்கம் ஒரு கிராம்ரூ.3 ஆயிரத்து 042க்கு விற்கப்பட்டது. இதுவே, நேற்று முன்தினம் ரூ.3 ஆயிரத்து 20-க்குவிற்கப்பட்டது. அட்சயதிருதியை நெருங்க உள்ள நிலையில் தங்கம் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக நகைக் கடை வியாபாரிகள் தெரி வித்துள்ளனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close