[X] Close

தமிழக கடற்கரை நோக்கி புயல்: கடலோர மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை- இந்திய வானிலை ஆய்வு மையம்


  • kamadenu
  • Posted: 25 Apr, 2019 12:56 pm
  • அ+ அ-

புதிதாக உருவாகப்போகும் புயலுக்கு ஃபானி என பெயரிடப்பட உள்ளது. தமிழகத்தை புயல் கடக்கும் எனவும் கடலோர மாவட்ட மக்கள் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் 25-ம் தேதி காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது எனவும். இரண்டு நாளில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று பின்னர் 29-ம் தேதி புயலாக மாறி தமிழகத்தை நோக்கி நகரக்கூடும்  என வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது.

 

தற்போது இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் (சென்னை) அளித்துள்ள தகவலில்,  இந்திய பெருங்கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி தமிழகத்தின் கடற்கரை பகுதிகளில் புயல் ஏற்பட வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஏப்ரல் 25-ம் தேதி இந்திய பெருங்கடல் – தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. ஏப்ரல் 27-ம் தேதி முதல் தமிழக கடற்கரையோர பகுதியில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இடம்மாறி, ஏப்ரல் 29-ம் தேதி தமிழகத்தில் புயல் வீச வாய்ப்புள்ளது. இந்தப்புயலுக்கு ஃபானி என பெயரிடப்படலாம் என தெரிகிறது.

 

இதனால் கடற்கரையோர மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.  ஒக்கி புயல், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் அடுத்த புயலின் தாக்கம் எப்படி இருக்குமோ என்கிற அச்சத்தில் உள்ளனர்.

 

புயல் எச்சரிக்கை வந்தவுடன் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும், தமிழக பேரிடர் மீட்புத்துறை எப்போதும் தயார் நிலையில் இருப்பதாகவும்,தமிழக வருவாய்த்துறை மற்றும் தமிழக பேரிடர் மேலாண்மைத்துறை வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close