[X] Close

உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக- பாஜக கூட்டணி தொடரும்: தூத்துக்குடியில் தமிழிசை தகவல்


  • kamadenu
  • Posted: 24 Apr, 2019 09:59 am
  • அ+ அ-

உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக- பாஜக கூட்டணி தொடரும் என, பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் அவர் கூறியதாவது: எதிர்க்கட்சிகள் எவ்வளவுதான் பொய் பிரச்சாரம் செய்தாலும், நாட்டு மக்கள் மோடி மீது நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த நம்பிக்கை மக்களவை தேர்தலில் எதிரொலிக்கும். தூத்துக்குடியில் தாமரை வெற்றிபெறும். உள்ளாட்சி தேர்தல் தள்ளிப் போனதற்கு திமுக தான் காரணம். அவர்கள் தான் வழக்கு போட்டு தேர்தலை இழுத்தடித்தனர். மேலும், திமுக ஆட்சி காலத்திலேயே உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் பலமுறை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

ஓட்டப்பிடாரம் இடைத்தேர் தலில் பிரச்சாரம் மேற்கொள்வேன். அதிமுக வேட்பாளருக்கு எங்கள் ஆதரவு முழுமையாக இருக்கும். உள்ளாட்சி தேர்தலிலும் இந்த கூட்டணி தொடர வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம். நிச்சயம் தொடரும்.

தூத்துக்குடியில் அனுமதியி ல்லாத துப்பாக்கிகள் புழக்கம் இருப்பதாக உயர் நீதிமன்ற நீதிபதியே நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது திமுக பிரமுகர் தனது சகோதரரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார். அவர் வைத்திருந்தது அனுமதி பெறாத துப்பாக்கி என்பது கவலை அளிக்கிறது. அனுமதியில்லாமல் துப்பாக்கி வைத்திருப்போர் குறித்து விசாரிக்க வேண்டும்.

மக்களின் விருப்பம் இல்லை யென்றால் எந்த திட்டத்தையும் நிறைவேற்ற மாட்டோம் என மத்திய அரசு தெளிவாக கூறியிருக்கிறது. எனவே, மீத்தேன் உள்ளிட்ட எந்த திட்டமாக இருந்தாலும் மக்களின் விருப்பம் இல்லையெனில் நிறைவேற்றப்படாது என்றார் அவர்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close