[X] Close

தமிழகம் முழுவதும் உள்ள முக்கியமான கிறிஸ்தவ ஆலயங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு: டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவு


  • kamadenu
  • Posted: 23 Apr, 2019 09:36 am
  • அ+ அ-

தமிழகம் முழுவதும் உள்ள முக்கியமான கிறிஸ்தவ ஆலயங் களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில் தமிழகம் மற்றும் தென்னிந்திய மாநிலங்களில் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப் படுத்த டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

முக்கிய ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழக கடற்கரையை ஒட்டிய கிராமப்புற பகுதிகளிலும் போலீஸ்சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பில் 3 குண்டுகள் கிறிஸ்தவ ஆலயத்தில் வைக்கப்பட் டவை. அதிகமான உயிரிழப்பு களும் இங்குதான் ஏற்பட்டுள்ளன. இலங்கையைச் சேர்ந்த இஸ்லாமிய அமைப்பு இந்தத் தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம், நியூசிலாந்தில் மசூதிக்குள் நுழைந்து முஸ்லீம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலாக இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாமோ என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

இதைத் தொடர்ந்து தமிழகம்முழுவதும் உள்ள கிறிஸ்தவஆலயங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வேளாங்கண்ணி, சென்னை சாந்தோம், பரங்கிமலை, சின்னமலை, பழவேற்காடு உள்ளிட்ட முக்கிய ஆலயங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும், வாகன சோதனை மற்றும் கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்தும்படி அனைத்து மண்டல ஐஜிக்களுக்கும் டிஜிபிடி.கே.ராஜேந்திரன் உத்தர விட்டுள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close