[X] Close

மருத்துவமனை பெயர் பலகை சரிந்து விபத்து: நாமக்கல்லில் பெண் மருத்துவர், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உயிரிழப்பு


  • kamadenu
  • Posted: 23 Apr, 2019 09:22 am
  • அ+ அ-

நாமக்கல் காந்தி நகரைச் சேர்ந்தவர் செல்வக்குமார். இவர் நாமக்கல் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளராக உள்ளார். இவரது மனைவி மருத்துவர் எஸ்.கலா (55) தனியார் மருத்துவமனை நடத்தி வருகிறார். கலா, நேற்று மாலை 5 மணியளவில் வீட்டில் இருந்து தனது இரு சக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு புறப்பட்டுச் சென்றார். அப்போது பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால், எல்ஐசி அலுவலகம் பின்புறமுள்ள தனியார் மருத்துவமனை உணவகத்துக்குள் மழையில் நனையாமல் நின்றுள்ளார்.

அப்போது, இரும்பாலான, மருத்துவமனையின் பெயர் பலகை சுவருடன் பெயர்ந்து சரிந்து விழுந்தது. இதில் மருத்துவர் கலா உள்ளிட்டோர் விளம்பர பலகையின் அடியில் சிக்கினர். அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்த அவர்களை மீட்டனர்.

எனினும், மருத்துவர் கலா, விளம்பர பலகை வைத்திருந்த தனியார் மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் ஓட்டுநரான சேந்தமங்கலத்தைச் சேர்ந்த எஸ்.மோகன்ராஜ் (39) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் காயம் அடைந்த 5 பேர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து நாமக்கல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close