[X] Close

வாக்கு எண்ணும் மையங்களில் காவல் ஆணையர் விஸ்வநாதன் ஆய்வு


  • kamadenu
  • Posted: 23 Apr, 2019 09:24 am
  • அ+ அ-

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் கடந்த 18-ம் தேதி நடந்தது.

சென்னையில் உள்ள 3 தொகுதிகளில் வடசென்னை தொகுதியில் பதிவான வாக்குகள் மெரினா கடற்கரை சாலையில்உள்ள ராணிமேரி கல்லூரியிலும், மத்திய சென்னை தொகுதியில் பதிவான வாக்குகள் நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியிலும், தென்சென்னை தொகுதியில் பதிவான வாக்குகள் கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் வைத்தும் எண்ணப்பட இருக்கின்றன.

தேர்தல் முடிந்ததும் எண்ணும் மையங்களில் உள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’ அறைகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு, அறைக்கதவுகள் பூட்டி சீலிடப்பட்டன. வாக்கு எண்ணும் 3 மையங்களுக்கும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதில் ‘ஸ்ட்ராங் ரூம்’ அருகேமுதல் வரிசையில் துணை ராணுவப்படையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். மற்ற 2அடுக்கு பாதுகாப்பை தமிழகபோலீஸார் மேற்கொண்டுள்ளனர்.

சென்னை வாக்கு எண்ணும்மையங்களில் மேற்கொள்ளப்பட்டு உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் 500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 3 ஷிப்ட் மூலம் பாதுகாப்பு பணியில் போலீஸார் ஈடுபடுகின்றனர். வாக்கு எண்ணும் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அனைத்துஅறைகளிலும் கண்காணிப்புக் கேமரா வைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 45 கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன.

கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வு செய்வதற்காக 3 கட்டுப்பாட்டு அறைகளும் உள்ளன. காவல்துறை பாதுகாப்பில் எந்த குறைபாடும் இல்லை. சீல் வைக்கப்பட்ட அறைகளுக்குச் செல்ல யாருக்குமே அனுமதி இல்லை. இவ்வாறு அவர் கூறினார். இந்தப் பேட்டியின்போது இணை ஆணையர் மகேஸ்வரி, துணை ஆணையர் ஷசாங்சாய் ஆகியோர் உடனிருந்தனர்.

 

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close