[X] Close

4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல்: கமல்ஹாசன் 12 நாட்கள் தீவிர பிரச்சாரம் - வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியீடு


4-12

  • kamadenu
  • Posted: 22 Apr, 2019 10:52 am
  • அ+ அ-

சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் நடக்கும் 4 தொகுதிகளில் கமல்ஹாசன் 12 நாட்கள் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.

தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு மே 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி 29-ம் தேதி நிறைவடைகிறது. இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் சார்பில் இத்தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மே 3-ம் தேதி ஓட்டப்பிடாரம் தொகுதியில் கமல்ஹாசன் பிரச்சாரத்தை தொடங்குகிறார். தொடர்ந்து 4-ம் தேதி ஓட்டப்பிடாரம், 5, 6 தேதிகளில் திருப்பரங்குன்றத்தில் பிரச்சாரம் செய்கிறார். தொடர்ந்து 10, 11 தேதிகளில் சூலூர், 12, 13 தேதிகளில் அரவக்குறிச்சி, 14-ம் தேதி ஒட்டப்பிடாரம், 15-ம் தேதி திருப்பரங்குன்றம், 16-ம் தேதி அரவக்குறிச்சி,17-ம் தேதி சூலூர் என மொத்தம் 12 நாட்கள் பிரச்சாரம் செய்ய உள்ளார்.

வேட்பாளர் பட்டியல் ஓரிரு தினங்களில் வெளியாகும் என்று தெரிகிறது.இது தொடர்பாக மக்கள் நீதி மய்ய வட்டாரங்கள் கூறியதாவது:4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலை சந்திப்பதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காலம் குறைவாக இருப்பதால் விருப்ப மனு பெறப்படுமா அல்லது கமல்ஹாசன் நேரடியாக வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து அறிவிப்பாரா என்பதை அவர் தான் முடிவு செய்வார். ஓரிரு நாளில் வேட்பாளர் பட்டியல் வெளியாகும்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close