[X] Close

ஆசியாவிலேயே முதன்முறையாக விண்ணில் ஏவப்பட்ட பலூன் செயற்கைக்கோள்: பெரியார் மணியம்மை பல்கலை. மாணவிகள் வடிவமைத்தது


  • kamadenu
  • Posted: 22 Apr, 2019 10:19 am
  • அ+ அ-

ஆசியாவிலேயே முதன் முறையாக, தஞ்சாவூர் வல்லம் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழக மாணவிகளால் வடிவமைக்கப்பட்ட பலூன் செயற்கைக்கோள் நேற்று விண்ணில் செலுத்தப்பட்டது.

தஞ்சாவூர் வல்லத்தில் உள்ள பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் பயிலும் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 15 மாணவிகள் கூட்டாகச் சேர்ந்து, சென்னை ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனத்தில் பயிற்சி பெற்று, ‘எஸ்கேஐ என்எஸ்எல்வி 9 மணியம்மையார் சாட்’ என்ற பலூன் செயற்கைக்கோளை வடிவமைத்தனர். இதை விண்ணில் செலுத்தும் நிகழ்ச்சி பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.ஏ.தனராஜ் வரவேற்றார். சென்னை ஸ்பேஸ் கிட்ஸ் நிறுவன முதன்மை செயல் இயக்குநர் ஸ்ரீமதிகேசன், பல்கலைக்கழக துணைவேந்தர் வேலுச்சாமி, ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் வீ.அன்புராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இஸ்ரோ மையத்தின் முன்னாள் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்று, மாணவிகளின் செயல்பாடுகளை பாராட்டி பேசியதாவது: ஆசியாவி லேயே முதன்முறையாக இந்தபல்கலைக்கழக மாணவிகள் கண்டுபிடித்த இந்த பலூன் செயற்கைக்கோள் விண்வெளிக்கு அருகில் சென்று ஆய்வு பணியில்ஈடுபட உள்ளது. பெண்கள் முன்னேறி வருவதன் முகற்கட்டம்தான், பெண்களே தயாரித்த இந்த செயற்கைக்கோளாகும். இதில் பங்கேற்ற 15 மாணவிகளும் விண்வெளி துறை ஆராய்ச்சியில் சிறப்பாகச் செயல்பட முடியும் என்றார்.

ஒரு லட்சத்து 3 ஆயிரம் அடி தொடர்ந்து, பல்கலைக்கழக மைதானத்தில் இருந்து முற்பகல் 11.30 மணிக்கு பலூன் செயற்கைக்கோள் ஏவப்பட்டது. ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூனுடன், வான்வெளியில் 70 ஆயிரம் அடி உயரத்துக்குச் சென்று, அங்குள்ள வெப்பநிலை காரணமாக உருமாற்றம் பெற்று, பாராசூட் உதவியுடன் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து 40 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்தில் தரையிறங்கும் வகையில் இந்த செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டிருந்தது.

ஆனால், இந்த செயற்கைக்கோள் ஒரு லட்சத்து 3 ஆயிரம் அடி உயரம் சென்று, 4 மணி நேரத்துக்குப் பின்னர், 20 கிலோ மீட்டர் தூரத்தில் தஞ்சாவூர் அருகே சுங்காந்திடல் என்ற கிராமத்தில் உள்ள வயலில் பாராசூட் மூலம் தரையிறங்கியது.

இந்த செயற்கைக்கோள் விண்ணை நோக்கிச் செல்லும்போதும், கீழே தரையிறங்கும் போதும், அதில் பொருத்தப்பட்டு உள்ள கேமரா உதவியுடன் வான்வெளியின் வளிமண்டலத்தில் உள்ள வெப்பநிலை, காற்றின் ஈரப்பதம், அங்குள்ள வாயுக்களின் தன்மை குறித்து கண்டறிந்து, நூற்றுக்கணக்கான புகைப்படங்களை எடுத்து அனுப்பியது.

இதனுடன் பொருத்தப்பட்டி ருந்த ஜிபிஎஸ் மற்றும் வெப்ப நிலை கணக்கிடும் கருவி, ஆகியவை அட்சரேகை, உயரம், திசைவேகம் ஆகியவற்றைக் கணக்கிட்டு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தெரியப்படுத்தியதால், பலூன் செயற்கைக்கோள் எங்கு செல்கிறது என பேராசிரியர்களும், மாணவர்களும் கணினி உதவியுடன் பார்த்துக்கொண்டே இருந்தனர்.

இந்நிகழ்வை ஆசியா புக்ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தினர் சாதனையாக பதிவு செய்து கொண்டனர். இந்நிகழ்வில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர் கலந்துகொண்டனர்.

 

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close