[X] Close

10 சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தகவல்


10

  • kamadenu
  • Posted: 22 Apr, 2019 09:36 am
  • அ+ அ-

தருமபுரி, கடலூர், திருவள்ளூர் ஆகிய மக்களவைத் தொகுதிகளில் இடம்பெற்றுள்ள 10 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த அனுமதிக்குமாறு தேர்தல்ஆணையத்துக்கு பரிந்துரைக்கப்பட்டு இருப்பதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.

தருமபுரி மக்களவைத் தொகுதிநத்தமேடு உள்ளிட்ட வாக்குச்சாவடிகளை, அரசியல் கட்சிகள் கைப்பற்றி கள்ள ஓட்டு போட்டதாக புகார்கள் எழுந்தன. மேலும் சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட பழுது காரணமாக வாக்குப்பதிவு தடைபட்டது. இதுதொடர்பாக தலைமைதேர்தல் அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 10 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்துக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு பரிந்துரைத்தார்.

இதுதொடர்பாக அவர் நேற்றுநிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில், வாக்குச்சாவடி அலுவலர்களின் அறிக்கைகளை பார்த்த பிறகு, 10 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்துமாறு தேர்தல் பொது பார்வையாளர்கள் பரிந்துரை செய்துள்ளனர். அதுதொடர்பான விவரங்கள் தேர்தல்ஆணையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, தருமபுரி மக்களவைத் தொகுதியில், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட அய்யம்பட்டி அமைவிடத்தில் 2, நத்தமேடு பகுதியில் 4, ஜல்லிபுதூர் பகுதியில் 2 என மொத்தம் 8 வாக்குச்சாவடிகள், திருவள்ளூர் மக்களவைத் தொகுதி, பூந்தமல்லி சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள மேட்டுப்பாளையம் வாக்குச்சாவடி, கடலூர் மக்களவைத் தொகுதி, பண்ருட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் திருவதிகை வாக்குச்சாவடி என மொத்தம் 10 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த அனுமதி கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நடைபெறும் தேதி தொடர்பாக தேர்தல் ஆணையம் அறிவிக்கும்.

கன்னியாகுமரி தொகுதியில் பட்டியலில் இருந்து வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பது தொடர்பாக, மாவட்ட ஆட்சியரிடம் இருந்து விரிவான அறிக்கை கோரப்பட்டுள்ளது. சார் ஆட்சியர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக, அம்மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். இவ்வாறு சாஹு தெரிவித்துள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close