[X] Close

மணப்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் லாரி மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு: தப்பியோடிய ஓட்டுநரை கைது செய்து போலீஸார் விசாரணை


3

  • kamadenu
  • Posted: 22 Apr, 2019 09:10 am
  • அ+ அ-

மணப்பாக்கம் பேருந்து நிறுத்தத் தில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது லாரி மோதியதில், 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தப்பியோடிய ஓட்டுநரை கைது செய்து போலீஸார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், மலனூர் குப்பை, சிங்கரபுரம் கிராமத்தை சேர்ந்த மூர்த்தி (32), கிருஷ்ணகிரி மாவட்டம், வரதா பள்ளி அருகே இகத்தூர் கிராமத்தைச் சேர்ந்த முரளி (24), கிருஷ்ணகிரி அருகே சின்னப்பள்ளியை அடுத்த கொல்லப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் (24) ஆகிய மூன்று பேரும் ராமாபுரத்தில் உள்ள பேக்கரியில் பணியாற்றி வந்தனர்.

காத்திருப்பு

இந்நிலையில் வேலை பிடிக்கவில்லை எனக் கூறி மூர்த்தி ஊருக்குச் செல்ல முடிவு செய்து, நேற்று முன்தினம் அதிகாலை 2 மணியளவில் மணப்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக் காக காத்திருந்தார். முரளி, சிவகுமார் ஆகியோர் வழியனுப்ப உடன் வந்து பேருந்து நிறுத்தத்தில் மூர்த்தியுடன் காத்திருந் தனர்.

அப்போது நந்தம்பாக்கத்தில் இருந்து போரூர் நோக்கி மணல் லாரி ஒன்று சென்றது. லாரியை ஓட்டுநர் கோட்டீஸ்வரன் ஓட்டினார். அவருடன் கிளீனர் பிரவீன் இருந்தார்.

கட்டுப்பாட்டை இழந்து..

இதில் கண் இமைக்கும் நேரத் தில் லாரி திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து நிறுத்தத்தில் புகுந்தது. இதில் மூர்த்தி, முரளி, சிவகுமார் மூவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் விரைந்து சென்று கிரேன் மூலம் லாரியை அப்புறப்படுத்தி சடலங்களை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, லாரி ஓட்டுநர் கோட்டீஸ்வரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close