[X] Close

இலங்கை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு தலைவர்கள் கண்டனம்


  • kamadenu
  • Posted: 22 Apr, 2019 09:14 am
  • அ+ அ-

இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக, அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங் கிணைப்பாளர் கே.பழனிசாமி: தேவால யங்களில் குழுமியிருந்த மக்கள் மீது மிகக் கொடூரமான வெடிகுண்டு தாக்கு தல்கள் நடத்தப்பட்டிருக்கும் செய்தியை கேட்டு சொல்லொண்ணா வேதனையில் ஆழ்ந்திருக்கிறோம்.

முற்றிலும் மனிதாபிமானமற்ற, சிறிதும் இரக்கமற்ற வகையில் நடத்தப்பட்டுள்ள தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம். தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு சக்தியை வழங்கவும் காயமடைந்தவர்கள் பூரண குணமடையவும் இறைவனை பிரார்த்திக்கிறோம்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: குண்டுவெடிப்பு உயிரிழப்புகள் இத யத்தை நொறுக்குகின்றன. வாழ்வுரிமை இழந்து தவிக்கும் ஈழத்தமிழர்களை அச்சுறுத்தும் வகையிலும் மதச்சிறு பான்மையினர் மனதில் நிரந்தரமான பயத்தை உருவாக்கும் வகையில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் குறித்து இலங்கை அரசு நியாயமான உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மனிதாபிமான சக்திகள் இணைந்து நின்று இதை முறியடிக்க வேண்டும். தமிழர்கள், பிற இனத்தவர், வெளிநாட்டினர் உள்ளிட்ட அனைவருக்கும் விரைந்து நீதி கிடைக்க வேண்டும்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். குண்டு வெடித்த பகுதிகளில் உள்ள தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களை மீட்டு தாய்நாட்டுக்கு அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன்: கோழைத்தனமான வெடிகுண்டு தாக்கு தலை வன்மையாக கண்டிக்கிறோம். மரணமடைந்தவர்களுக்கு அஞ்சலியை யும் அவரது குடும்பத்தினருக்கு ஆறு தலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மதிமுக பொது செயலாளர் வைகோ: குண்டு வெடிப்பு தாக்குதல்கள் இதயத்தை நடுங்க வைக்கிறது. ஈவு இரக்கமற்ற பயங்கரவாதத்தில் ஈடுபட்ட கொலை பாதகர்கள் கண்டுபிடிக்கப்பட்டு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். உயிர் இழந்தோர் குடும்பத்தினருக்கு கண்ணீர் அஞ்சலியை தெரிவிப்பதுடன் படுகாயமுற்றோருக்கு தக்க சிகிச்சை வழங்கி காப்பாற்ற வேண்டிய நடவடிக் கைகளில் இலங்கை அரசும் பொது நல அமைப்புகளும் ஈடுபட வேண்டும்.

அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன்: ஈஸ்டர் திருநாளில் தேவாலயங்கள் உள்ளிட்ட இடங்களை குறிவைத்து அப்பாவி மக்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் கோழைத்தன மானவை. இத்தகைய தீவிரவாத நடவ டிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோன்ற காட்டுமிராண்டுகளுக்கு முடிவு கட்டியே தீர வேண்டும்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் தலைவர் திருமாவளவன்: பயங்கரவாதத்தின் துணை கொண்டு அதிகாரத்தை கைப்பற்ற பேரினவாத சக்திகள் முன்வந்துள்ளன. இதை சர்வதேச சமூகம் வேடிக்கை பார்க்க கூடாது. உடனடியாக இலங்கை பிரச்சினையில் ஐநா சபை தலையிட்டு அங்கு உள்ள மத மற்றும் இன சிறுபான்மையினருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமல்ஹாசன்: வன்முறை ஒருபோதும் மனித முரண்பாடுக்கு இறுதி தீர்வாக முடியாது. இலங்கை யில் குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள் கிறேன். இலங்கை அரசு நடுநிலையாக பாரபட்சமின்றி மக்களுக்கு விரைந்து நீதி வழங்க வேண்டும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: கொடூர தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கவும், இலங்கையில் தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதும் இலங்கை அரசின் கடமை என்பதை இலங்கைக்கு இந்தியா வலியுறுத்த வேண்டும். அமைதி திரும்புவும் இயல்பு சூழல் திரும்பவும் இலங்கையுடன் இந்திய அரசு தொடர்பில் இருக்க வேண்டும்.

நடிகர் ரஜினிகாந்த்: ஈஸ்டர் திருநாளில் இலங்கையில் நடந்த இந்த துயரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை.

மஜக பொது செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்எல்ஏ: இலங்கையில் அமைதியான சூழல் நிலவுவதாக கருதிய நிலையில் இந்த பயங்கரவாத செயல் இலங்கை மக்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் என்பதில் ஐயமில்லை. உயிரிழந்த அனைவரின் குடும்பத்துக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close