[X] Close

பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்றுடன் நிறைவு; மே 8-ல் முடிவு வெளியீடு


1-8

  • kamadenu
  • Posted: 22 Apr, 2019 09:08 am
  • அ+ அ-

பிளஸ் 1 பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் இன்றுடன் நிறைவு பெறுகிறது. திட்டமிட்டபடி மே 8-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.

தமிழக பள்ளி கல்வித்துறையின் சமச்சீர் பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 1-ல் தொடங்கி 29-ம் தேதியுடன் முடிந்துவிட்டன. இதையடுத்து பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. இதில் பிளஸ் 2 வகுப்புக்கு விடைத்தாள் திருத்துதல் முடிந்து தேர்வு முடிவுகள் கடந்த ஏப்ரல் 19-ல்வெளியிடப்பட்டன. பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகளும் கடந்த வாரம் முடிந்துவிட்டது.

தொடர்ந்து தேர்வு முகாம்களில் பிளஸ் 1 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் மட்டும் நடைபெற்று வந்தன. மொத்தம் 8 லட்சத்து 22 ஆயிரம் மாணவர்கள் எழுதிய விடைத்தாள்கள் திருத்தும் பணியில் 46 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன.

பெரும்பாலான தேர்வு முகாம்களில் இன்றுடன் (ஏப்ரல் 22) விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு பெறுகின்றன. வேலுார் உள்ளிட்ட சில மாவட்ட மையங்களில் மட்டும் நாளை (ஏப்ரல் 23) திருத்தும் பணிகள் முடிவடைய இருக்கிறது. இதையடுத்து மதிப்பெண்கள் பதிவேற்றம் மற்றும் தற்காலிக சான்றிதழ் தயாரிக்கும் பணிகளை தீவிரப்படுத்த தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. மேலும், ஏற்கெனவே அறிவித்தபடி பிளஸ் 1 தேர்வு முடிவுகள் மே 8-ல் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close