[X] Close

சென்னை - செங்கல்பட்டு, திருமால்பூர் இடையே மின்சார விரைவு ரயில்கள் விரைவில் இயக்கம்


  • kamadenu
  • Posted: 22 Apr, 2019 09:04 am
  • அ+ அ-

சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு, திருமால்பூர் மின்சார விரைவு ரயில்கள் மீண்டும் விரைவில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை பரங்கிமலையில் கடந்த ஆண்டு ஜூலை 24-ம் தேதி நடந்த மின்சார விரைவு ரயில் விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, இந்த வழியாக இயக்கப்பட்டு வந்த மின்சார விரைவு ரயில்களின் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன. இதனால், புறநகரில் இருந்து சென்னையில் உள்ள அலுவலகங்கள், கல்லூரிகளுக்கு வரும் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர். பயண நேரமும் சுமார் 40 நிமிடங்கள் கூடுதலாக ஏற்படுவதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே, விபத்து ஏற்பட்ட பரங்கிமலை பகுதியில் புதுப்பிக்கப்பட்ட தண்டவாளத்தில் விரைவு ரயில்களின் சேவை கடந்த சில மாதங்களாக இயக்கப்படுகின்றன. ஆனால், மின்சார விரைவு ரயில்கள் (பாஸ்ட்) மட்டும் இயக்கப்படவில்லை. இதுகுறித்து பயணிகள் சிலர் கூறும்போது, ‘‘திருமால்பூர், செங்கல்பட்டில் இருந்து கடற் கரைக்கு இயக்கப்படும் மின்சார விரைவு ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால், புறநகரில் இருந்து வரும் பயணிகள் அவதிப்படுகின்றனர். எனவே, பொதுமக்களின் நலன் கருத்தில் கொண்டு இனியும் தாமதிக்காமல் மின்சார விரைவு ரயில்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பரங்கிமலை அருகே விரைவு பாதைகள் சீரமைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழியாக மின்சார விரைவு ரயில்களை இயக்கலாம் என ரயில்வே பாதுகாப்பு ஆணையரகம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த தடத்தில் மீண்டும் மின்சார விரைவு இயக்குவதற்கான ஆய்வுபணிகள் நடந்து கொண்டிருக்கின் றன. எனவே, அடுத்த மாதம் இறுதி வாரத்தில் மின்சார விரைவு ரயில் சேவைகள் தொடங்க அதிக வாய்ப்புள்ளது’’ என்றனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close