[X] Close

கோயில்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படக் கூடாது: இந்து சமய அறநிலையத் துறை உத்தரவு


  • kamadenu
  • Posted: 21 Apr, 2019 09:51 am
  • அ+ அ-

கோயில்களில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று இந்துசமய அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு பருமழை பொய்த்ததால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது. கோடைகாலமும் தொடங்கி விட்டதால் தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கோயில்களில் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்டவற்றுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கத்தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி கோயில் நிர்வாகத்தினருக்கு இந்து சமய அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது.

ஆழ்துளைக் கிணறுகள்

இதற்கிடையே கோடைகாலத்தில் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க சென்னை வடபழனி முருகன் கோயிலில் 2 ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுதவிர, பக்தர்களுக்கு குடிநீர், வெயில் காலம் என்பதால் மோர் உள்ளிட்டவை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதேபோல், சென்னை மாநகர் முழுவதும் உள்ள கோயில்களில் தண்ணீர் பிரச்சினை ஏற்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கோடை காலம் என்பதால் கோயில் குளங்களில் தண்ணீர் இல்லை.

கோயில் நிர்வாகத்தைக் கவனித்து வரும் செயல் அலுவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு, கோயில்களில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

தண்ணீர் சேமிப்பு

ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பது, லாரிகள் மூலம் தண்ணீரை வாங்கி சேமித்து வைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அதிகாரிகளும் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நடவடிக்கைகளின் மூலம் கோடைகாலம் முழுவதும் கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close