[X] Close

தருமபுரி, திருவள்ளூர், கடலூர் தொகுதிகளில் முறைகேடு நடந்த 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவா? -தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என சத்யபிரத சாஹு பதில்


10

  • kamadenu
  • Posted: 21 Apr, 2019 09:45 am
  • அ+ அ-

தருமபுரி, கடலூர், திருவள்ளூர் தொகுதிகளுக்கு உட்பட்ட 10 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடத்துவது குறித்து, பொதுப் பார்வையாளர்களின் அறிக்கை கள் அடிப்படையில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார்.

தமிழகத்தில் கடந்த ஏப்.18-ம் தேதி நடந்த வாக்குப்பதிவின்போது தருமபுரி, திருவள்ளூர், கடலூர் மக்களவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில், சிலவற்றில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் உள்ளே நுழைந்து, வாக்குப்பதிவு செய்ததாக தகவல் கள் வெளியாகின. அதிகாரிகள் ஆய்வின்போது, பதிவான வாக்குகள் எண்ணிக் கையில் வித்தியாசம் இருந்தது.

இதையடுத்து, அந்த வாக்குச்சாவடி களில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்நிலையில் இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியதாவது: தருமபுரி மக்களவைத் தொகுதியில் உள்ள 8 வாக்குச்சாவடிகள், திருவள்ளூரில் ஒன்று மற்றும்கடலூரில் ஒன்று என 10 வாக்குச் சாவடிகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது. இந்த சம்பவங்கள் தொடர்பாக, உரிய தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அதிகாரிகள், தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர். அறிக்கை அடிப்படையில்ஒரு வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த, அந்ததொகுதியின் பொதுப் பார்வையாளர்கள் அறிக்கை அவசியமாகும். அந்த அடிப்படையில், இந்த 10 வாக்குச் சாவடிகளிலும் மறுவாக்குப் பதிவு நடத்துவதற் கான விரிவான அறிக்கையை தருமபுரி, திருவள்ளூர், கடலூர்மக்களவைத் தொகுதிகளின் பொதுப் பார்வையாளர்கள், தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர். அந்த அறிக்கையின் அடிப்படையில் மறுவாக்குப்பதிவு நடத்தலாமா, இல்லையா என்பதை தேர்தல் ஆணையம் முடிவு செய்து அறிவிப்பு வெளியிடும். சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளில் மறுவாக் குப்பதிவு நடத்துவதற்கென தெளிவான நடைமுறைகள் உள்ளன. இவற்றின் அடிப்படையில் வாக்குப்பதிவு நடத்தப்படும்.

சிறுபான்மை வாக்காளர்கள்கன்னியாகுமரி தொகுதியில், வாக்குப்பதிவு நாளில் 15 ஆயிரத் துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக புகார்கள் வந்தன. இந்த புகார்கள் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் இருந்து முதல்கட்ட அறிக்கை பெறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தவறுகள் ஏதும் நடக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும், விசாரணை நடத்த வருவாய் கோட்டாட்சியருக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.

மேலும், குமரி மாவட்டத்தில் சிறுபான்மை வகுப்புகளைச் சேர்ந்த வாக்காளர்கள் அதிக அளவில்பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக புகார்கள் வந்தன.

வாக்குச்சாவடி வாரியாகவே வாக்காளர் பட்டியல் தயாரிக்கப் படுகிறது. மதரீதியாக பிரித்து பட்டியல் தயாரிக்கப்படுவதில்லை. எனவே, குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டதாக கூறுவதை ஏற்க முடியாது.

வாக்குப்பதிவு குறைவுசென்னை மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளது. பெரும்பான்மையான நகர்ப்புறங் களில் வக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட போதிலும் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளது. இதுதொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்க வேண்டியதில்லை. நடிகர் ரஜினிக்கு வலது கை ஆள்காட்டி விரலில் மை வைத்தது பெரிய குற்றச்செயல் ஒன்றும் கிடையாது. மேலும், நடிகர்கள் சிவகார்த்திகேயன், காந்த் ஆகியோர் பெயர்கள் வாக்காளர் பட்டி யலில் இல்லாத நிலையிலும் அவர்கள் வாக்களிக்க அனுமதிக் கப்பட்டுள்ளது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கோரியுள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close