[X] Close

4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்காக அதிமுகவில் இன்று விருப்ப மனு விநியோகம்


4

  • kamadenu
  • Posted: 21 Apr, 2019 09:31 am
  • அ+ அ-

சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங் குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் தேர்வு நடக்கவுள்ளது. இதற்கான விருப்ப மனு இன்று வழங்கப்படுகிறது.

இன்று மாலையே மனுக்களை பூர்த்தி செய்து வழங்க அதிமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது. இதன்படி இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை விண்ணப்ப கட்டணமாக ரூ.25 ஆயிரம் செலுத்தி மனுவை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இடைத்தேர்தலில் அதிமுக வுக்கு மக்களவை தேர்தல் கூட்டணி யில் இருந்த கட்சிகள் ஆதரவு அளிக்கும் என்றாலும், திமுக நிறுத் தியுள்ள வேட்பாளர்களுக்கு நிகரான செல்வாக்குள்ளவர்களை நிறுத்த அதிமுக முடிவெடுத்துள்ளது.

இதுதொடர்பாக, முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல் வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசித்து வருகின்றனர். இன்று விருப்பமனு வழங்கும் நிகழ்ச்சிக் காக காலை 10 மணிக்கு முதல் வரும், துணை முதல்வரும் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வர வுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close