[X] Close

காய்ச்சலின் தீவிரத்தால் நாடுமுழுவதும் 837 பேர் உயிரிழப்பு; பன்றிக்காய்ச்சலால் 3 மாதத்தில் 23,700 பேர் பாதிப்பு: சிறப்பு கவனம் செலுத்துமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு


837-3-23-700

  • kamadenu
  • Posted: 21 Apr, 2019 09:20 am
  • அ+ அ-

நாடுமுழுவதும் கடந்த 3 மாதத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு பன்றிக்காய்ச்சலால் 23,700 பேர் பாதிக்கப்பட்டு, 837 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிறப்பு கவனம் செலுத்தி தீவிர கண்காணிப்பில் ஈடுபடுமாறு அனைத்து மாநில அரசுகளையும் மத்திய அரசுஅறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த 2009,2010-ம் ஆண்டுகளில் பன்றிக்காய்ச்சல் (ஏஎச்1என்1 இன்ஃப்ளுயன்சா வைரஸ் கிருமி) தீவிரமாக காணப்பட்டது.

ஆயிரக்கணக்கானோர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தமிழகத்திலும் பன்றிக்காய்ச்சல் பெரியஅளவிலான பாதிப்பை ஏற்படுத்தியது.

சுகாதாரத் துறை எடுத்த தடுப்பு நடவடிக்கைகளால் பன்றிக்காய்ச்சல் பரவுவது தடுக்கப்பட்டது. இதேபோன்ற பாதிப்பை பன்றிக்காய்ச்சல் கடந்த 2015-ம் ஆண்டுஏற்படுத்தியது.

அந்த ஆண்டு மட்டும் நாடுமுழுவதும் பன்றிக்காய்ச்சலால் 42,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். 3,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

ஏப்ரல் 14-ம் தேதி வரை இந்நிலையில் கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் ஏப்ரல் 14-ம்தேதி வரையிலான கால கட்டத்தில் நாடுமுழுவதும் 23,700 பேர்பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், காய்ச்சலின் தீவிரத்தால் 837 பேர் உயிரிழந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத் துறையின் தேசிய நோய்கள் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு முழுவதும் பன்றிக்காய்ச்சலால் 15,266 பேர்பாதிக்கப்பட்டு, 1,113 பேர் உயிரிழந்திருந்தனர். ஆனால், இந்த ஆண்டுகடந்த 3 மாதத்தில் மட்டும் பன்றிக்காய்ச்சலால் 23,700 பேர் பாதிக்கப்பட்டு, 837 பேர் உயிரிழந்திருப்பது சுகாதாரத் துறையை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

நாடுமுழுவதும் பன்றிக்காய்ச்சலின் பாதிப்பு அதிகமாக இருப்பதால் அனைத்து மாநிலங்களும் நோய் பரவுவதைத் தடுக்கும் பணியில் சிறப்பு கவனம் செலுத்துமாறும், போதுமான மருந்துகளை கையிருப்பில் வைக்கும்படியும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கையிருப்பில் மருந்துகள் இதுதொடர்பாக தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “இந்த ஆண்டின் தொடக்கத்தில் ராஜஸ்தான், குஜராத், அரியானா மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருந்தது.

தமிழகத்தில் கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு பன்றிக்காய்ச்சல் பாதிப்புகுறைவாகத்தான் உள்ளது.

 பன்றிக்காய்ச்சல் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் விவரங்களை சேகரிக்கும்படியும், போதுமான அளவு மருந்துகளை கையிருப்பில் வைக்கும்படியும் தெரிவித்துள்ளனர்” என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close