[X] Close

தமிழகத்தில் கோடை மழை 2 நாட்கள் நீடிக்கும்: வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தகவல்


2

  • kamadenu
  • Posted: 21 Apr, 2019 08:16 am
  • அ+ அ-

தமிழகத்தில் மத்திய மற்றும் தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை நேற்றும் நீடித்தது. அதிகபட்சமாக நாமக்கல்லில் 93 மிமீ மழை பெய்தது.

திண்டுக்கல், சேலம், நீலகிரி, ஈரோடு, திருவாரூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்தது. அதேநேரம் வழக்கம்போல, வட மத்திய மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக நிலவியது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது: காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக மாநிலத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் இந்த மழை சூழல் அடுத்த 2 நாட்களுக்கு நீடிக்கும். மத்திய, தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

தேனி, திண்டுக்கல், சேலம், திருநெல்வேலி பகுதிகளில் நாளை (ஏப்ரல் 22) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 50 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். எனினும், காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, வேலூர் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி வரை வெப்பநிலை உயர்ந்திருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close