[X] Close

4 தொகுதி இடைத்தேர்தல்: அதிமுகவில் நாளை விருப்ப மனு


4

  • kamadenu
  • Posted: 20 Apr, 2019 09:41 am
  • அ+ அ-

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர் தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் நாளை (ஏப். 21) விருப்ப மனு அளிக்கலாம் என முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங் குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மே 19-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது.

இந்த தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்பும் கட்சியினர் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.21) காலை 10 முதல் மாலை 5 மணி வரை சென்னையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு அளிக்கலாம். விண்ணப்ப கட்டணம் ரூ.25 ஆயிரம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அன்றைய தினமே வழங்க வேண்டும்’ என தெரிவித்துள்ளனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close