[X] Close

வருவாயைவிட செலவு அதிகரிப்பு: வங்கிகளிடம் கடன் வாங்க மின்வாரியம் திட்டம்


  • kamadenu
  • Posted: 20 Apr, 2019 09:35 am
  • அ+ அ-

வருவாயைவிட செலவு அதிகரித்துள்ள நிலையில், செலவுகளைச் சமாளிக்க வங்கிகளிடம் இருந்து கடன் வாங்க மின்வாரியம் முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு மின்வாரியத்துக்கு மின்கட்டணம் வசூல், அரசு மானியங்கள் என ஆண்டுக்கு ரூ.40 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது. ஆனால், ஊழியர்களின் சம்பளம், புதிய மின் திட்டங்களைத் தொடங்குதல், மின்கொள்முதல் ஆகியவற்றுக்கு பெரும் தொகை செலவிடப்படுகிறது. இதனால் வருவாயைவிட செலவு அதிக அளவில் உள்ளது.

இதற்காக, மத்திய அரசின் பவர் ஃபைனான்ஸ், ரூரல் எலக்ட்ரிபிக்கேஷன் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து மின்வாரியம் கடன் பெற்றுள்ளது. இந்நிலையில், புதிய நிதியாண்டு தொடங்கியுள்ளதால், மின்வாரியத்துக்கு ஏற்படும் மற்ற செலவினங்களைச் சமாளிக்க வங்கிகளிடம் இருந்து கடன் பெற மின்வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக, வங்கி அதிகாரிகளை, மின்வாரிய அதிகாரிகள் சந்தித்துப் பேசியுள்ளனர். இந்தச் சந்திப்பின்போது, மின்வாரியம் ஏற்கெனவே பவர் ஃபைனான்ஸ், ரூரல் எலக்ட்ரிபிகேஷன், நபார்டு வங்கி உள்ளிட்டவற்றிடம் இருந்து ரூ.60 ஆயிரம் கோடி கடன் பெற்ற விவரங்கள் மற்றும் தற்போது தேவைப்படும் கடன் விவரங்கள் குறித்து வங்கி அதிகாரிகளுடன் மின்வாரிய அதிகாரிகள் விவாதித்தனர். இத்தகவலை மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close