சென்னை காவல் உளவு பிரிவு இணை ஆணையர் நியமனம்


சென்னை: சென்னை காவல் உளவுப் பிரிவு இணை ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி தர்மராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை கிழக்கு மண்டல காவல் இணை ஆணையராக இருந்த ஜி.தர்மராஜன், சென்னை காவல் ஆணையரக உளவு (நுண்ணறிவு) பிரிவு இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அங்கு துணை ஆணையராக இருந்த எஸ்.அரவிந்த், திருச்சி காவல் ஆணையரகத்தில் தலைமையிட துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை உள்துறைச் செயலர் பி.அமுதா பிறப்பித்துள்ளார். சென்னை உளவுப் பிரிவு துணை ஆணையர் (1) தரத்திலிருந்து இணை ஆணையராக தரம் உயர்த்தப்பட்டு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.